பக்கம்:பாலர் பாடல்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடம்

கரடி கூட உறுமிக் கொண்டே காலைத் தூக்கிற்று.

சிறுத்தை ஒன்று கோபங் காட்டிச் சீறப் பார்த்தது.

அங்கு எங்கள் அருகிலேயே சிங்கம் நின்றது.

கரடி, சிங்கம் புலியைக் கண்டேன். கண்டும் பயமில்லை!

சூரனைப் போல் நின்றி ருந்தேன். துளியும் பயமில்ல!

சென்ற அந்த இடம் உனக்குத் தெரிய வில்லையா ?


மிருகக் காட்சி சாலை தானே, வேருென்றுமில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலர்_பாடல்.pdf/16&oldid=1314814" இலிருந்து மீள்விக்கப்பட்டது