பக்கம்:பாலர் பாடல்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அப்பா அடித்துப் போட்டால்-என்னை
  அணைத்துத் தேற்றும் பாட்டி.
தப்போ, தவறோ செய்தால்-என்னைத்
  தடுத்துத் திருத்தும் பாட்டி.

சாய்ந்து மடியில் படுத்தால்-என்னைத்
  தட்டிக் கொடுக்கும் பாட்டி.
நோய்கள் ஏதும் வந்தால்-அதை
  நொடியில் போக்கும் பாட்டி.

யாருங் காட்டா அன்பை-என்றும்
  எனக்குக் காட்டும் பாட்டி.
நூறு, நூறு ஆண்டு-இன்னும்
  நூறு ஆண்டு வாழ்க.

20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலர்_பாடல்.pdf/23&oldid=1317950" இலிருந்து மீள்விக்கப்பட்டது