பக்கம்:பாலர் பாடல்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போகுதுபார், ரயில் போகுதுபார்.
புகையினைக் கக்கியே போகுதுபார்.

'குபுகுபு' சப்தம் போடுதுபார்.
'கூகூ' என்றுமே கூவுதுபார்.

தூரமும், நேரமும் குறைவதுபார்.
துரிதமா யெங்குமே ஓடுதுபார்.

அறைஅறை யான வண்டிகள்பார்.
அவற்றிலே மனிதர் செல்வதுபார்.

25
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலர்_பாடல்.pdf/28&oldid=1317963" இலிருந்து மீள்விக்கப்பட்டது