பக்கம்:பாலர் பாடல்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எண்ண எண்ணத் தித்திக்கும் மிட்டாய்;
  எச்சில் ஊறச் செய்யும் மிட்டாய்;
அண்ணன், தம்பி, தங்கை யோடு,
  அப்பா கூடத் தின்னும் மிட்டாய்.

பல்லும், நாக்கும் வர்ணந் தீட்டிப்
  பலவி தத்தில் காட்டும் மிட்டாய்;
பல்லில் லாத பாட்டி கூடப்
  பையப் பையச் சப்பும் மிட்டாய்.

குழந்தை யெல்லாம் வாங்கும் மிட்டாய்;
  கூடிக் கூடித் தின்னும் மிட்டாய்;
அழுத பிள்ளை வாயைமூட
  அம்மா வுக்கு உதவும் மிட்டாய்.

28
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலர்_பாடல்.pdf/31&oldid=1317969" இலிருந்து மீள்விக்கப்பட்டது