பக்கம்:பாலஸ்தீனம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூகோளமும் சரித்திரமும்

3

அராபியர்கள் நாடோடி வாழ்க்கையை நடத்தும் ஒரு பூர்விக ஜாதியார் என்று சிலர் நினைக்கின்றனர். இது மிகத் தவறு. இவர்களுடைய தலையணி முதலியன, புராதன நாகரிகத்தைக் காட்டுகிறதேயாயினும், நவீன நாகரிகப் போக்கில் இவர்கள் ஈடுபடாமலில்லை. அராபியர்களில் ஐந்தில் மூன்று பங்கினர் விவசாயிகள். இவர்கள் அநேகமாக மலைப் பிரதேசங்களிலேயே தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள். அராபியர்களின் மொத்த ஜனத் தொகையில் எட்டில் ஒரு பங்கு பேர் கிறிஸ்தவர்கள். இவர்கள் அநேகமாக நகரங்களில் வசிக்கும் வியாபாரிகளாகவும், உத்தியோகஸ்தர்களாகவும் இருக்கிறார்கள். அராபியர்களில் ஆறு விதமான அரசியல் கட்சிகள் இருந்தன. ஆனால், 1935ம் வருஷத்தில் இவற்றில் ஐந்து கட்சிகள் ஒன்று சேர்ந்து விட்டன.

1936ம் வருஷத்திற்கு முன்னர், யூதர்களும், அராபியர்களும் சிநேகப் பான்மையுடனேயே பழகி வந்தார்கள். ஆனால், இப்பொழுது இந்தப் பழக்கமெல்லாம் நின்று விட்டன. இரு ஜாதியினரும் ஒரே நகரமாயிருந்தாலும், தனித் தனி இடங்களிலேயே வசிக்கிறார்கள். யூதர்கள், தங்கள் ஜாதியினருடைய ஹோட்டல்களில்தான் சாப்பிடுகிறார்கள்; மோட்டாரில் ஏறிச் செல்கிறார்கள்; சிகரெட் பிடிப்பதும், தீப்பெட்டி உபயோகிப்பதும் கூட யூதருடையதுதான். இங்ஙனமே அராபியர்களும், தங்கள் ஜாதியினருடைய சாமான்களையே உபயோகிக்கிறார்கள். இரு ஜாதியினருக்கும் தனித்தனிப் பள்ளிக்கூடங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/13&oldid=1654471" இலிருந்து மீள்விக்கப்பட்டது