பக்கம்:பாலஸ்தீனம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

பாலஸ்தீனம்

இருக்கின்றன. அந்தந்த ஜாதிப் பிள்ளைகள், அந்தந்த ஜாதிப் பள்ளிக்கூடங்களுக்கே செல்கின்றன. பாலஸ்தீனத்தில், மத்திய தரைக்கடலோரமாகத் தென் கிழக்கில் உள்ள சமதரைப் பிரதேசம் செழிப்புள்ளது. மத்தியிலுள்ள பிரதேசத்தில் குன்றுகளும், முட் புதர்களும் நிரம்பியிருக்கின்றன. தெற்குப் பிரதேசம் வெறும் வனாந்திரம். இங்ஙனம், மூன்று விதமாகப் பாலஸ்தீனத்தைப் பிரிக்கலாம்.

பாலஸ்தீனத்தில் இயற்கை வளம் மிகக் குறைவு. கடலோரப் பிரதேசத்தில் ஆரஞ்சு, திராட்சை முதலிய பழ தினுசுகள் அதிகமாக உற்பத்தி செய்யப் படுகின்றன. நீர்ப்பாசன வசதிகள் மிகக் குறைவாயுள்ள படியால், விவசாய அபிவிருத்திக்கு இந்த நாட்டில் வழி கிடையாது. மரணக் கடலிலிருந்து, கைத் தொழில்களுக்கு வேண்டிய சில ரஸாயனப் பொருள்கள் கிடைக்கின்றன.

‘பாவஸ்தீனம் எப்பொழுதுமே ஒரு சமூகத்தாருக்குச் சொந்தமாயிருந்ததில்லை. இனியும் அநேகமாக அப்படியிராது’ என்று ஸர் ஜார்ஜ ஆடம்ஸ் ஸ்மித் என்ற ஓர் ஆங்கிலேய அறிஞன் கூறினான். பாலஸ்தீனத்தின் பூர்விக சரித்திரத்தை நாம் சிறிது புரட்டிப் பார்க்கிற போது, இந்த வாக்கியங்கள் எவ்வளவு உண்மையாயிருக்கின்றன?

முற்காலத்தில் எதியோப்பியர், அஸ்ஸிரியர், பாரசீகர், மங்கோலியர் முதலிய இன்னும் யாராரோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/14&oldid=1654472" இலிருந்து மீள்விக்கப்பட்டது