பக்கம்:பாலஸ்தீனம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூகோளமும்‌ சரித்திரமும்‌

5

இந்த நாட்டில் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார்கள். இவர்களில், ஒவ்வொருவரும் தங்கள் அதிகார பலம் குன்றியவுடன், தங்களாலியன்றவளவு இந்த நாட்டை அழித்தும் விட்டிருக்கிறார்கள். கிரேக்க மன்னனாகிய மஹா அலெக்ஸாந்தர், கி. மு. 322ம் வருஷத்தில் இந்த நாட்டின் வழியாகத்தான் எகிப்தின் மீது படையெடுத்துச் சென்றான். இந்த நாட்டின் தெற்குப் பாகத்திலுள்ள காஜா என்ற ஊரைக் கைப்பற்ற இவன் இரண்டு மாத காலம் முற்றுகை போட வேண்டியிருந்தது. மஹா அலெக்ஸாந்தரின் செல்வாக்குக்கு இந்த நாடு உட்பட்டிருந்ததேயாயினும், இவன், நாட்டு மக்களின் தினசரி வாழ்க்கையில் தலையிடவில்லை.

அலெக்ஸாந்தருக்குப் பிறகு, அவனுடைய முக்கிய தளகர்த்தர்களில் ஒருவனாகிய டாலெமி என்பவனுடைய ஆதிக்கத்தின் கீழ் பாலஸ்தீனம் இருந்தது. இவன் காலத்தில் கிரேக்க நாகரிகம் இந்த நாட்டில் தலை காட்டத் தொடங்கியது. ஆனால், கிரேக்கர்களுடைய ஆதிக்கம் அதிக நாள் நீடிக்க வில்லை. கி.மு.63ம் வருஷத்தில் பாம்பே (Pompey) என்பவனுடைய முயற்சியால், இந்த நாடு, ரோம ஏகாதிபத்தியத்தின் செல்வாக்குக்குட்பட்டது. இவர்களுடைய காலத்தில், பாலஸ்தீன ஜனங்கள் கலகத்திற்குக் கிளம்பினார்கள். இதனால், ரோமர்கள் கோபங் கொண்டு தங்களின் சிறந்த தளகர்த்தனாகிய வெஸ்பேஸிபான் என்பவனுடைய தலைமையில் ஒரு பெரும் படையை அனுப்பி கி.பி.70ம் வருஷம் செப்டம்பர் மாதம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/15&oldid=1654473" இலிருந்து மீள்விக்கப்பட்டது