பூகோளமும் சரித்திரமும்
7
செப்டம்பர் மாதத்திற்குள் பாலஸ்தீனம் முழுவதும் நேசக் கட்சியினர் வசமாகி விட்டது. பின்னர், சர்வ தேச சங்கத்தின் சார்பாக, இதன் நிருவாகம் பிரிட்டிஷார் வசம் ஒப்புவிக்கப்பட்டது. இதனை ஒரு ஹை கமிஷனர் மேலதிகாரியாயிருந்து நிருவாகம் செய்கிறார். இவர், பிரிட்டிஷ் குடியேற்ற நாட்டு மந்திரி இலாகாவினால் நியமிக்கப் படுகிறவர். இவருடைய வருஷச் சம்பளம் 4,000 பவுன்.
பாலஸ்தீனத்திலுள்ள முக்கியமான நகரங்களும், அவற்றின் ஜனத் தொகையும் வருமாறு:-
பெயர் |
ஜனத் தொகை |
|
நிருவாக சௌகரியத்திற்காக, பாலஸ்தீனத்தை வட பாலஸ்தீனம் என்றும், தென் பாலஸ்தீனமென்றும் இரண்டு ஜில்லாக்களாகப் பிரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஜில்லாவும், ஒவ்வொரு டிப்டி கமிஷனரின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறது. வட பாலஸ்தீன ஜில்லாவின் தலைநகரம் ஹைபா. தென் பாலஸ்தீன ஜில்லாவின் தலைநகரம் ஜாபா. ஜெருசலேம்