பக்கம்:பாலஸ்தீனம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

பாலஸ்தீனம்

சுல்தான், யூதர்கள் இங்ஙனம் பாலஸ்தீனத்தில் நிலம் வாங்குவதை விரும்பவில்லை. ஆனாலும், யூதர்கள், உலகத்தின் மற்றப் பாகங்களில் தங்களுக்குள்ள செல்வாக்கை உபயோகித்து, பாலஸ்தீனத்தில் தங்கள் உரிமையை விருத்தி செய்து கொண்டு வந்தார்கள். 1908ம் வருஷத்தில் ‘பாலஸ்தீன நில அபிவிருத்தி கம்பெனி’யொன்று ஏற்படுத்தி, அதன் மூலமாக தென்னமெரிக்கா, ஈரான் முதலிய நாடுகளிலிருந்து கூட அநேக யூதர்களை வரவழைத்துக் குடியேற்றினார்கள். ஐரோப்பிய யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, துருக்கிய அதிகாரிகள் அநேக யூதர்களை பாலஸ்தீனத்திலிருந்து, தேசப்பிரஷ்டம் செய்தார்கள். இதன் விளைவாக, இவர்களின் ஜனப் பெருக்கம் சிறிது குறைந்திருந்தது. 1918ம் வருஷம் பாலஸ்தீன யூதர்களின் ஜனத்தொகை சுமார் 55,000தான். இப்பொழுது —சுமார் இருபது வருஷங்களுக்குப் பிறகு—நாலரை லட்சம் பேருக்கு மேல் இருக்கிறார்கள்.

இங்கு ஒரு விஷயம் குறிப்பிடத்தக்கது. பாலஸ்தீனத்தை யூதர்களுக்கு உரிமை நாடாக்கிக் கொடுக்க வேண்டுமென்ற கிளர்ச்சிக்கு, பதினெட்டாவது, பத்தொன்பதாவது நூற்றாண்டுகளிலிருந்தே பிரிட்டிஷார் ஆதரவு காட்டி வந்ததற்குக் காரணங்கள் என்ன என்ற விவரங்களைப் பற்றி நாம் இந்த நூலில் ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. பொதுவாக, ஜையோனிய இயக்கத்திற்கு பிரிட்டிஷ் ராஜதந்திரிகளுடைய ஆதரவு, ஐரோப்பிய யுத்தத்திற்குப் பிறகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/24&oldid=1671189" இலிருந்து மீள்விக்கப்பட்டது