16
பாலஸ்தீனம்
ளின் ரகசியத்தை ஜெர்மானியர்கள் மட்டுந்தான் தெரிந்து வைத்திருந்தார்கள். பிரிட்டிஷார் என்ன செய்வர்? ‘இந்த ரகசியத்தைக் கண்டு பிடித்துச் சொல்லுங்கள்’ என்று அப்பொழுதைய பிரிட்டிஷ் மந்திரிச் சபையானது, பிரிட்டிஷ் விஞ்ஞான சாஸ்திரிகளுக்கு விண்ணப்பம் செய்து கொண்டது. அந்தச் சமயம் மான்செஸ்டர் சர்வ கலாசாலையில் டாக்டர் செயிம் வீஸ்மான் (Dr. Chaim Weizmann) என்ற ரஸாயன போதகாசிரியன் ஒருவன் இருந்தான். இவன் யூதன். ‘ஜையோனிய இயக்க’த்தின் தலைவன். இவன் மேற்படி ரஸாயனப் பொருளின் ரகசியத்தைக் கண்டு பிடித்துப் பிரிட்டிஷாருக்குத் தெரிவித்தான். நேசக் கட்சியினரின் வெற்றிக்கு இஃதொரு முக்கிய காரணமாயிருந்தது. இந்தப் பேருதவியைச் செய்த டாக்டர் வீஸ்மானுக்குப் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் சன்மானமளிக்க விரும்பினர். ஆனால், சமூக நலச் சிந்தை வாய்ந்த வீஸ்மான் இதனை மறுத்து விட்டான். அதற்குப் பதிலாக, பாலஸ்தீனத்தில் யூதர்கள் கொண்டாடும் உரிமைகளுக்கு நேசக் கட்சியினர் ஆதரவு அளிக்க வேண்டுமென்று கேட்டான். யூதர்களின் சாஸனமென்று கருதப் படுகிற பால்பர் அறிக்கை (Balfour Declaration) பிறந்ததற்கு இஃதொரு முக்கிய காரணம்.
1917ம் வருஷம் பிரிட்டிஷ் மந்திரிச் சபையில், ஏ.ஜே. பால்பர் என்பவன் அந்நிய நாட்டு மந்திரியாயிருந்தான். இவன் 2-11-1917ல் பிரிட்டிஷ் மந்திரிச் சபையின் பூரண அங்கீகாரம் பெற்று, லார்ட் ராத்ஸ்-