பக்கம்:பாலஸ்தீனம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

பாலஸ்தீனம்

கரிக்கப்பட்டதோ, அப்பொழுதே அதற்குட்பட்ட பாலஸ்தீனமும் தங்களுடைய சுவாதீனத்தில்தான் இருக்குமென்றும் அராபியர்கள் நம்பினார்கள்.[1]பின்னர், பிரிட்டிஷ் ராஜ தந்திரிகள், இந்த அராபிய சுதந்திர ஒப்பந்தத்திற்கு வியாக்கியானம் செய்ததும், இதனின்றும் பாலஸ்தீனம் விலக்கப்பட்டதும், அராபியர்களிடையே பெரிய ஆத்திரத்தைக் கிளப்பி விட்டன. பாலஸ்தீன அராபியர்களின் தலைவருள் ஒருவனான அவனி பே அப்துல் ஹாதி என்பவன் பின்வருமாறு கூறுகிறான்:-

கிரேட் பிரிட்டனைப் பொறுத்த மட்டில், அகன் எல்லா வாக்குறுதிகளும், ஒப்பந்தங்களும், சந்தர்ப்பம், தன்னலம் இவைகளை யொட்டியே இருக்கின்றன போலும். பிரிட்டிஷ் அரசாங்கத்தார், தங்களுடைய ஒப்பந்தங்களை, தேவைக்குத் தகுந்தாற் போல் மாற்றிக் கொள்ளவோ, அல்லது அதனைத் திருத்தவோ, அல்லது அதற்குப் புது வியாக்கியானம் செய்யவோ தயாரா யிருக்கிறார்கள்.

பிரிட்டிஷாருடைய வாக்குறுதிக்கு, இங்ஙனம் பங்கம் ஏற்பட்டு விடவே, அராபியர்களின் தேசீய இயக்கமானது, பிரிட்டிஷாருக்கு விரோதமான ஒரு கிளர்ச்சியாக மாறி விட்டது. 1919ம் வருஷம் சிரியா, பாலஸ்தீனம், ஈராக் முதலிய நாடுகள் பிரிட்டிஷ்


  1. இதனை பீல் கமிஷன் அறிக்கையும் (Peel Commission Report) வலியுறுத்திக் கூறுகிறது. மேற்படி அறிக்கையின் 42-ம் பக்கம் பார்க்க.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/32&oldid=1671387" இலிருந்து மீள்விக்கப்பட்டது