பக்கம்:பாலஸ்தீனம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அராபியர்களின்‌ தேசீய இயக்கம்‌

23

ராணுவ ஆக்ரமிப்பின் கீழ் இருந்த காலத்தில், இந்த நாடுகளின் நிலைமையைப் பற்றி விசாரித்து வரும்படி, அமெரிக்கக் குடியரசின் பிரசிடெண்டான வில்ஸன், அமெரிக்க அறிஞர்கள் அடங்கிய ஒரு சிறு கமிஷனை அனுப்பினான். இந்தக் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில், அராபியர்கள், பாலஸ்தீனத்திற்குப் பூரண சுதந்திரம் வேண்டுமென்று கோருகிறார்களென்றும், இதை பிரிட்டிஷ் ராஜதந்திரிகளுக்கு எடுத்துக் காட்டினால், அவர்கள் பால்பர் அறிக்கையைத் திருப்பி எடுத்துக் காட்டி, இந்த அறிக்கையிலே கண்ட உறுதியை மீறி, பாலஸ்தீனத்தை எவ்வாறு அராபியர்கள் வசம் ஒப்புவித்து விட முடியுமெனக் கேட்கிறார்களென்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. எனவே, ஐரோப்பிய யுத்தம் முடிவு பெற்ற பிறகு, அராபியர்களின் சுதந்திர பாலஸ்தீனம் உருக் கொண்டு எழுவதற்குப் பதிலாக, ‘யூதர்களின் தேதீய ஸ்தல’மொன்றை பாலஸ்தீனத்தில் ஸ்தாபிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு கூடிய ‘மாண்டேடரி’ நிருவாகத்திற்குட்பட்ட பாலஸ்தீனம் தோன்றியது. ‘யுத்தத்திற்கு முன்னர் துருக்கியர்களின் ஆதீனத்திற்குட் பட்டிருந்தோம்; இப்பொழுது பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருக்கிறோம்’ என்றும், இந்த ஆதிக்கத்தை ஸ்திரப்படுத்துவதற்காகவே இந்த ‘மாண்டேடரி’ நிருவாகம் ஏற்படுத்தப் பட்டிருக்கிறதென்றும் பாலஸ்தீன அராபியர்கள் நம்பி விட்டார்கள். யுத்த சமயத்தில், பிரிட்டிஷார் கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டனவே யென்பது இவர்கள் மனத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/33&oldid=1671394" இலிருந்து மீள்விக்கப்பட்டது