பக்கம்:பாலஸ்தீனம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

பாலஸ்தீனம்

துப் பார்த்தால், கிராம ஜனங்களும் விவசாயிகளும், ‘யூதர்களின் தேசீய ஸ்தலம்’ அமைக்கப்படுவதனால் உண்டாகும் விளைவுகளைப் பற்றிக் கவலையும், சிரத்தையும் கொண்டிருக்கிறார்கள் என்பது நன்கு தெரிகிறது. இங்ஙனமே பாலஸ்தீனத்தில், சுய ஆட்சி ஸ்தாபனங்கள் அபிவிருத்தி செய்யப் படுவதைப் பற்றியும் ஊக்கங் காட்டுகிறார்கள். அராபிய விவசாயிகளும், கிராம ஜனங்களும், ஐரோப்பாவிலுள்ள அநேக ஜனங்களை விட அதிகமான அரசியல் மனப்பான்மையைக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும்.

பத்து வருஷங்களுக்கு முன்னால் எழுதப்பட்டவை இந்த வாக்கியங்கள். அப்பொழுதே, பாலஸ்தீனத்தின் தேசீய இயக்கமானது, பொது ஜன இயக்கமாக இருந்திருக்கிறது. இப்பொழுது கேட்க வேண்டுமா?

‘யூதர்களின் தேசீய ஸ்தலம்’ அமைக்கப்படுமென்ற நோக்கத்தோடு, பாலஸ்தீன அரசாங்க நிருவாகம் நடைபெறத் தொடங்கியது முதல், அராபியர்களிடையே தேசீய உணர்ச்சியானது வலுத்து நிற்பானேன்? யூதர்களின் குடியேற்றத்தை இவர்கள் ஏன் மறுக்க வேண்டும்? யூதர்கள் மீது கொண்ட துவேஷம் மட்டுந்தான் இதற்குக் காரணமா? அப்படி காரணங் கற்பிப்பது, அராபியர்களின் தேசீய உணர்ச்சியை அவமானப் படுத்துவதாகும். ‘யூதர்களின் தேசீய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/38&oldid=1671608" இலிருந்து மீள்விக்கப்பட்டது