பக்கம்:பாலஸ்தீனம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யூதர்‌ குடியேற்றத்தின்‌ விளைவு

33

சென்று புதிதாக யூதர்களால் ஸ்தாபிக்கப்பட்ட தொழிற்சாலைகளில் கூலியாட்களாய் அமர்ந்தார்கள். ஆனால், இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கூலியோ மிகச் சொற்பம்.

இது நிற்க. யூதர்களின் கட்சியைச் சிறிது கேட்போம். தாங்கள் எந்த நிலங்களை விவசாயத்திற்கென்று சுவாதீனப்படுத்திக் கொண்டார்களோ, அவை தங்கள் சுவாதீனமாவதற்கு முன்னர் வெறுஞ் சதுப்பு நிலமாகவோ அல்லது கரம்பாகவோ இருந்தனவென்றும், விவசாயஞ் செய்யப்பட்டு வந்த நிலங்களைத் தாங்கள் அதிகமாகச் சுவாதீனப்படுத்திக் கொள்ளவில்லை யென்றும், அப்படி சுவாதீனப்படுத்திக் கொண்டிருந்தாலும், அவைகளுக்கு நல்ல விலை கொடுத்திருப்பதாகவும், சாகுபடி நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட அராபிய விவசாயிகளுக்கு வேறு நிலமோ, போதிய பணமோ நஷ்டஈடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதென்றும் யூதர்கள் கூறுகிறார்கள்.

இவற்றை யாரும் மறுக்கவில்லை. ஆனால், அராபிய விவசாயிகள் இதனால் திருப்தியடையவில்லையே. தாங்கள் பரம்பரையாகச் சாகுபடி செய்து வந்த நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதுதான், அவர்களுக்கு அதிக அதிருப்தியை அளித்திருக்கிறது. எந்த நிலத்தில் தலைமுறை தலைமுறையாகத் தங்கள் வியர்வையைப் பாய்ச்சி, அதிலிருந்து கிடைக்கிற தானியங்களைக் கொண்டு வயிறு வளர்த்து வந்தார்களோ, அதிலிருந்து வெளியேறிச் செல்வ-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/43&oldid=1671778" இலிருந்து மீள்விக்கப்பட்டது