பக்கம்:பாலஸ்தீனம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

பாலஸ்தீனம்

தென்றால்,—அதிலும் பிறருடைய பலவந்தத்தின் பேரில்— யாருக்குமே கஷ்டமாகத்தானிருக்கும். மற்றும், இவர்களுக்கு நஷ்ட ஈடாகக் கொடுக்கப் பெற்ற மாற்று நிலங்களோ, விவசாயத்திற்கு லாயக்கில்லாதவைகளாகவோ போதுமானவையாகவோ இல்லை. பணமாக நஷ்ட ஈடு பெற்றவர்களோ, அதனால், எவ்வித பலனையும் அநுபவிக்க முடியவில்லை. இவர்களுக்குக் கடன் கொடுத்திருந்த லேவாதேவிக்காரர்கள் மொத்தமாக அதனை வாங்கிக் கொண்டு போய் விட்டார்கள்.

அராபியர்களுக்கு மற்றொரு பயமும் ஏற்பட்டிருக்கிறது. இவர்களின் ஜனத்தொகையானது, 1922ம் வருஷத்தில் ஆறரை லட்சமாயிருந்தது. இது 1936ம் வருஷத்தில் பத்து லட்சமாகி விட்டது. இந்த நிலையில், தங்களுடைய பிதிரார்ஜிதமான நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக யூதர்கள் வசம் போய் விட்டால், நாளா வட்டத்தில் தங்களுக்குச் சொந்தமாயுள்ள சராசரி நிலங்களின் ஈவு குறைந்து போகுமேயென்று இவர்கள் அஞ்சுகிறார்கள். ‘விவசாய முறையில் ஏதேனும் மாற்றஞ் செய்யப்பட்டாலன்றி, ஜனத் தொகை அதிகமாகி வரும் அராபியர்களின் ஜீவனத்திற்குப் போதிய அளவு நிலம் இராது’ என்று பீல் கமிஷன் அறிக்கையும் கூறுகிறது.

அராபிய விவசாயிகளின் நிலைமை இப்படியிருக்க, நகரங்களிலே வசிக்கும் அராபியத் தொழிலாளர்களின் நிலைமையென்ன? சுமார் இரண்டு லட்சம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/44&oldid=1671832" இலிருந்து மீள்விக்கப்பட்டது