பக்கம்:பாலஸ்தீனம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யூதர்‌ குடியேற்றத்தின்‌ விளைவு

35

அராபியர்கள், நகரங்களில் கூலி வேலை செய்து அற்ப ஜீவனம் நடத்துகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் அரசாங்கத்தாருடைய மராமத்து இலாகா, ரெயில்வேக்கள், துறைமுகங்கள் முதலியவற்றில் வேலை செய்கிறார்கள். இன்னுஞ் சிலர், யூதர்களின் தொழிற்சாலைகளிலும், அராபியர்களின் தொழில் ஸ்தாபனங்களிலும் வேலைக்கமர்ந்திருக்கிறார்கள். யூதத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப் பெறும் கூலி விகிதத்தை விட இவர்களுக்குக் கொடுக்கப் பெறும் கூலி விகிதம் குறைவு. அறிவின் உபயோகத்திற்கு அவசியமில்லாத வேலைகளில் அராபியர்களே பெரும்பான்மையோராக இருக்கின்றனர். இவர்களுக்குக் கொடுக்கப் பெறும் கூலி விகிதமானது, சுற்றுப் புறமுள்ள ஈராக், சிரியா முதலிய நாடுகளில் கொடுக்கப் பெறும் கூலி விகிதத்தை விட அதிகமேயானாலும், இவர்களின் வாழ்க்கைச் செலவானது வருமானத்தை விட அதிகமாயிருக்கிறது. உதாரணமாக ஹைபா என்ற துறைமுகப் பட்டினத்தில் வீட்டு வாடகை மிக அதிகம். ஒரு வீட்டில் ஓர் அறைக்கு மட்டும் சுமார் இருபது ரூபாய் விகிதம் மாத வாடகை செலுத்த வேண்டும். அராபியத் கொழிலாளி ஒருவனுடைய தினசரி கூலி சராசரி ஒரு ரூபாய்க்கு மேல் இரண்டு ரூபாய்க்குட்பட்டுத்தானிருக்கிறது. இந்த வருமானத்தில், ஏறக் குறைய பாதி பாகத்தை வீட்டு வாடகைக்கு மட்டும் செலவழித்து விட்டால், அவனுடைய மற்றக் குடும்ப காரியங்கள் நடப்பதெங்ஙனம்? மேற்படி ஹைபா நகரத்தில் சுமார் எண்ணூறுக்கு மேல்பட்ட அரா-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/45&oldid=1671975" இலிருந்து மீள்விக்கப்பட்டது