பக்கம்:பாலஸ்தீனம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

பாலஸ்தீனம்

பியத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களோடு நகருக்குப் புறம்பான ஓரிடத்தில் தகரக் கொட்டகைகள் அமைத்துக் கொண்டு வசிக்கிறார்கள். மற்றும் அராபியத் தொழிலாளர்களை ஒருமுகப் படுத்திச் செலுத்தக் கூடிய தொழிற் சங்க ஸ்தாபனங்கள் எதுவும் இல்லை. அப்படி ஏதேனும் தொழிற் சங்க ஸ்தாபன முயற்சி செய்யப் படுமானால், அதனை அரசாங்கத்தார் உடனே அடக்கி விடுகின்றனர். யூதர்களுக்கென்று தனியான ஒரு தொழில் ஸ்தாபனமிருக்கிறது. இதற்கு ‘ஹிஸ்தாத்ரூத்’ (Histadruth) என்று பெயர். இதனிடமிருந்தும் ,அராபியத் தொழிலாளர்கள் எவ்வித உதவியும் பெறுவதில்லை. இதற்கு மாறாக, இவர்கள் மேற்படி ஸ்தாபனத்தைச் சந்தேகிக்கிறார்கள். இன்னும் அதிகமான யூதர்களை பாலஸ்தீனத்தில் குடி புகுத்துவதற்கும், தங்களுக்கு வேலை கிடைக்காமற் செய்து விடுவதற்குமே மேற்படி ‘ஹிஸ்தாத்ரூத்’ ஏற்பட்டிருப்பதாக அராபியத் தொழிலாளர்கள் நம்புகிறார்கள்.

இது நிற்க, யூதர்களின் குடியேற்றத்தினால், சில அராபியர்கள் நன்மையும் அடைந்திருக்கிறார்கள். யூதர்களுக்கு நல்ல விலைக்குத் தங்கள் நிலங்களை விற்றதனால், இவர்களிற் பலர் எதிர்பாராத வண்ணம் பணக்காரர்களாகி விட்டனர். அராபியர்கள் உற்பத்தி செய்யும் விவசாயப் பொருள்களில் சுமார் ஒரு கோடி பவுன் பெருமானவற்றை யூதர்கள் வருஷந்தோறும் வாங்குகிறார்கள். இந்த ஒரு கோடி பவுனும் அராபியர்களில் ஒரு சிலருடைய பொருளாதார அந்தஸ்தை உயர்த்திக் கொடுக்கிறதல்லவா? இந்தக் காரணங்களி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/46&oldid=1671986" இலிருந்து மீள்விக்கப்பட்டது