பக்கம்:பாலஸ்தீனம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலகங்கள்‌

53

களும் வெற்றியடைவதற்கான காரியங்களைச் செய்ய வேண்டுமென்ற எண்ணம் இவர்களுக்கு ஏற்பட்டு விட்டது இயற்கைதானே.

1935ம் வருஷ ஆரம்பத்திலிருந்தே, பாலஸ்தீன தேசீய இயக்கமானது, சில நிர்மாண வேலைகளைச் செய்ய முற்பட்டது. அராபிய பாங்கி ஒன்று திறக்கப் பட்டது. அராபிய இளைஞர் சங்கங்கள் ஆங்காங்குத் தோன்றி, ஜனங்களிடையே பிரசாரஞ் செய்தன. அராபிய அரசியல் வாதிகளிடையே ஆறு விதமான அரசியல் கட்சிகள் இருந்தனவல்லவா? இவற்றில் ஐந்து கட்சிகள், தங்களுடைய கருத்து வேற்றுமைகளை யெல்லாம் ஒதுக்கித் தள்ளி விட்டு, தேச நலனுக்காக ஒன்று சேர்ந்தன. இவை தவிர, யூகர்களுக்கு நிலங்களை விற்கக் கூடாதென்று மசூதிகளிலும் பத்திரிகைகளிலும் பலத்த பிரசாரஞ் செய்யப்பட்டது.

இதனோடு அராபிய தேசீய வாதிகள் நிற்கவில்லை. 1935ம் வருஷம் நவம்பர் மாதம், இவர்கள் ஒரு பிரதிநிதிக் கோஷ்டியாகச் சேர்ந்து, அப்பொழுதைய பாலஸ்தீனத்து ஹை கமிஷனராயிருந்த ஸர் ஆர்தர் வாக்கப் (Sir Arthur Wauchope)பைப் பேட்டி கண்டு ஒரு யாதாஸ்தைச் சமர்ப்பித்தனர். இதில் தங்கள் கோரிக்கை இன்னின்னவையென்று விரிவாகக் குறிப்பிட்டிருந்தனர். இவற்றுள் முக்கியமானவை (1) பாலஸ்தீனத்தில் ஜன நாயக முறையில் அரசாங்கம் அமைதல் வேண்டும்; (2) யூகர்களுக்கு நிலங்கள் விற்கப்படுவது தடுக்கப் பட வேண்டும்; (3) யூகர்கள் குடி புகுவது நிறுத்தப் பட வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/63&oldid=1672239" இலிருந்து மீள்விக்கப்பட்டது