56
பாலஸ்தீனம்
அராபியர்களுக்கு இந்த 'மப்டி' மதத் தலைவராக மட்டும் இல்லை; அரசியல் தலைவராகவும் இருந்தது இங்குக் குறிப்பிட்டது. தவிர, உலக முஸ்லீம்களிடையே ஜெருசலேம் 'மப்டி'க்கு அதிகமான செல்வாக்கு உண்டு.[1]
முதலில் சிறிய கமிட்டிகள் ஆங்காங்கு ஏற்பட்டு, பிறகு பெரிய கமிட்டி ஏற்பட்டது நமக்கு எதை அறிவுறுத்துகிறது? பாலஸ்தீனத்தில் தோன்றிய தேசீய உணர்ச்சியானது, ஆரம்பத்தில் பாமர ஜனங்களிடத்திலிருந்தே உற்பத்தியாயிற்றென்பதும், இஃது ஒரு வகையாக வளர்ந்து வருகையில்தான், தலைவர்கள் இதனைக் கைப்பற்றிக் கொண்டு நடத்தத் தொடங்கினார்களென்பதும் விளங்கவில்லையா? இதனால், மேலே கூறப்பட்ட சிறிய கமிட்டிகள், சந்தர்ப்பத்திறகுத் தகுந்தாற் போல், தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் சுபாவமுடைய தலைவர்கள் யாரேனும் இருந்தால், அவர்களை ஒழுங்குபடுத்தி ஒரு நிலையில் நிறுத்தி வைக்கக் கூடிய சக்தி பெற்றிருந்தன.
- ↑ ‘மப்டி’ என்பது அராபியச் சொல். சட்டத்தை விவகரிப்போர் என்று அர்த்தம். துருக்கி சாம்ராஜ்யத்தில் இந்த ‘கிராண்ட் மப்டி’ பதவிக்கு அதிகமான செல்வாக்கு இருந்தது.1924ம் வருஷம் துருக்கியக் குடியரசு அரசாங்கம் இந்தப் பதவியை ரத்து செய்து விட்டது. ஜெருசலேத்தின் ‘கிராண்ட் மப்டி’, பாலஸ்தீனத்திலுள்ள முஸ்லீம்களின் பிரச்னைகள் சம்பந்தமாக அரசாங்கத்தாருக்கு ஆலோசனை கூற, 1921ம் வருஷம் ஹை கமிஷனரால் நியமிக்கப்பட்ட ‘முஸ்லீம் தலைமைச் சங்க’த்திற்கும் (Moslem Supreme Council) தலைமை வகிப்பது கவனிக்கத்தக்கது.