பக்கம்:பாலஸ்தீனம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

பாலஸ்தீனம்

னாலும் வேறு வகையாலும் சேதமாயின. பிரிட்டிஷ் உத்தியோகஸ்தர்கள் பல இடங்களில் தாக்கப்பட்டார்கள். 1936ம் வருஷம் ஜூலை மாதத்திலிருந்து, மோசூலிலிருந்து வரும் பெட்ரோல் எண்ணெய்க் குழாய், பல இடங்களில் துளை செய்யப்பட்டும், தீ வைக்கப்பட்டும் சேதங்கள் உண்டு பண்ணப் பட்டன. இறுதியாக, மலைப் பிரதேசங்களில் ஆயுதந் தரித்த சிறு சிறு கூட்டங்கள் ஒன்று சேர்ந்து, கொள்ளையடிக்க ஆரம்பித்தன. கொலைகளும் நடைபெற்றன. அமைதியாகத் தொடங்கிய வேலை நிறுத்தமானது, ஆயுதந் தரித்த புரட்சியாக மாறி விட்டது.

வேலை நிறுத்தம் தொடங்கிய காலத்தில், அரசாங்கத்தார் கடுமையான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளவில்லை. தானாகவே அடங்கி விடும் என்று கருதினர் போலும். பின்னர், தீவிரமான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளத் தீர்மானித்தனர். 1936ம் வருஷம் மே மாதம் எகிப்திலிருந்து துருப்புகள் வரவழைக்கப்பட்டன. ஜூன் மாதம் அராபியத் தலைவர்கள் பலர் காப்பில் வைக்கப் பட்டார்கள். அடக்குமுறை தாண்டவம் செய்யத் தொடங்கியது.கலகக்காரர்களை ஒளித்து வைத்திருக்கிற இடங்கள் என்று சந்தேகிக்கப்பட்ட வீடுகள், தகர்த்தெறியப்பட்டன. ஏதேனும், ஒரு கிராமத்தில் பலாத்காரச் செயல் நடை பெற்றால், அந்தக் கிராமத்திலுள்ள அனைவருக்கும் சேர்த்து அபராதம் விதிக்கப்பட்டது.

இந்தச் சமயத்தில் ஜாபா என்ற நகரத்தில் ஒரு சிறிய சம்பவம் நடைபெற்றது. இஃது அராபியர்களுக்கு இன்னும் அதிகமான ஆத்திரத்தை உண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/68&oldid=1672293" இலிருந்து மீள்விக்கப்பட்டது