பக்கம்:பாலஸ்தீனம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

VII
பிரிவினைப் பிரச்னை

ற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி, 1936ம் வருஷம் நவம்பர் மாதம் லார்ட் பீல் தலைமையில் நியமனம் பெற்றிருந்த ராயல் கமிஷன், பாலஸ்தீனத்தில் வந்திறங்கியது. ஆரம்பத்தில் அராபியர்கள், இதற்கு முன்னர் சாட்சியங் கொடுக்க மறுத்தார்கள். சிறிது காலம் கமிஷனுடைய விசாரணைக்குப் பல இடையூறுகள் ஏற்பட்டன. பின்னர், சுற்றுப்புறமுள்ள நாடுகளின் தலைவர்கள் ஏற்படுத்திக் கொடுத்த சமாதானச் சூழலின் மத்தியில், ஒரு விதமாக விசாரணை தொடங்கப் பெற்றது சுமார் ஏழு மாத காலம் வரை, கமிஷனார், பாலஸ்தீனத்தின் பல பாகங்களுக்கும் சென்று, விசாரணை நடத்தினார்கள் விசாரணை தொடங்கிய காலத்திலிருந்து, கமிஷனின் அறிக்கை வெளியாகிற காலம் வரை, குழப்பங்கள் ஒன்றும் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். சில்லரைச் சச்சரவுகள் ஆங்காங்கு நடை பெற்றதேயாயினும், இவை, ஒழுங்கு பட்ட புரட்சியைச் சார்ந்தவையென்று சொல்ல முடியாது.

1937ம் வருஷம் ஜூலை மாதம் பீல் கமிஷன் அறிக்கை வெளியாயிற்று. இந்த அறிக்கையைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/73&oldid=1672373" இலிருந்து மீள்விக்கப்பட்டது