பக்கம்:பாலஸ்தீனம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

பாலஸ்தீனம்

முஸோலினி தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட பிறகு, ரோமாபுரி சர்வகலாசாலையில் அராபிய மாணாக்கர் சிலருக்கு, இலவசக் கல்வி போதிக்க ஏற்பாடு செய்ததாகவும் சொல்லப்பட்டன. முஸோலினியின் பிரசாரம், பாலஸ்தீன அராபியர்களிடையே நடைபெற்றதா இல்லையாவென்பதைப் பற்றிய ஆராய்ச்சி ஒரு புறமிருக்கட்டும். ஆனால், அராபிய பத்திரிகைகள், இந்தச் சமயத்தில், பாகிஸக் கொள்கைகளை விளக்கியும், அவற்றின் உயர்வைப் பாராட்டியும் கட்டுரைகளை வெளியிட்டன. முஸோலினி, ஹிட்லர் முதலியோருடைய படங்கள், அவர்களைப் பாராட்டும் பான்மையோடு வெளியாயின. இத்தலியிலிருந்தும், ஜெர்மனியிலிருந்தும், அராபியர்களுக்கு ஆயுதங்களும், பணமும் கிடைத்துக் கொண்டிருந்தனவென்ற வதந்தி பலமாக இருந்தது.

இனியும், பிரிட்டிஷ் அரசாங்கம் சும்மாயிருக்குமா? இருக்கத்தான் முடியுமா? ‘அராபிய பெரிய கமிட்டி’ கலைக்கப்பட்டது. அதன் அங்கத்தினர்கள் கைது செய்யப் பட்டு, இந்திய மகா சமுத்திரத்திலுள்ள ஸெய்செல்லெஸ் தீவுகளுக்கு (Seychelles Islands) அனுப்பப்பட்டு விட்டார்கள். ஜெருசலேம் ‘கிராண்ட் மப்டி’ வகித்திருந்த ‘சூப்ரீம் முஸ்லீம் கவுன்சில்’ தலைமைப் பதவியிலிருந்து அவர் விலக்கப்பட்டார். அதனோடு, மத ஸ்தாபனங்கள் சம்பந்தமான பண நிருவாகமும் ‘மப்டி’யிடமிருந்து பறிக்கப்பட்டது. செல்வாக்கு நிறைந்த ‘மப்டி’யோ பாலஸ்தீனத்தில் இராமல், லெபனோன் நாட்டின் தலை நகரமாகிய பெய்ரத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/84&oldid=1672426" இலிருந்து மீள்விக்கப்பட்டது