பக்கம்:பாலும் பாவையும்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 "அவர்களுக்கு என்ன குறைச்சல்?-நினைத்தால் பாகிஸ்தானுக்குப் போவார்கள்; நினைத்தால் இந்துஸ்தானுக்கு வருவார்கள்!” என்றான் கனகலிங்கம். "ஏன், அவர்களுக்கு லுங்கி வியாபாரமோ?” "ஆமாம்.” ‘இவர்களைப் போன்றவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகளைப் பார்க்கும்போது சில சமயம் நாம் மெஜாரிட்டி’யா யிருப்பதைவிட 'மைனாரிட்டி’யாயிருப்பதே ரொம்ப நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது!” "அதேமாதிரி 'மைனாரிட்டி'களுக்கும் மெஜாரிட்டி’யா யிருந்தால் தேவலை என்று தோன்றும். எது எப்படியிருந்தாலும் தற்சமயம் அகதிகளா யிருப்பதுதான் ரொம்ப ரொம்ப நல்லது!” "நீ சொல்வது ரொம்ப ரொம்ப ரொம்ப சரி!-இப்பொழுது அகதிகளால்தானே சர்க்காரின் அனுதாபத்தைப் பரிபூரணமாகப் பெறமுடிகிறது?’ என்று அவன் சொன்னதை அப்படியே ஆமோதித்தான் ராதாமணி. "ஆனால் அதிலும் ஒரு சங்கடம் இருக்கிறது.” “என்ன சங்கடம்.” 'அந்த அகதிகள் வயிற்றுச் சோற்றுக்காகக் தங்களுடைய சொந்த நாட்டை விட்டுக் கடல் கடந்து சென்ற தென்னாப்பிரிக்கா அகதிகளாகவோ, மலேசியா அகதிகளாகவோ, சிங்கப்பூர் அகதிகளாகவோ சிலோன் அகதிகளாகவோ இருக்கக்கூடாது; கிழக்கு வங்கத்திலிருந்தும்,பஞ்சாபிலிருந்தும் வகுப்பு வெறிக்கு அஞ்சி ஓடி வந்த அகதிகளாயிருக்க வேண்டும்.” སྣ༤ ། ། "ஆமாம்.ஆமாம்.” "அப்படியே இருந்தாலும் அவர்களிடம் குறைந்த பட்சம் ஒரு லகர மாவது இருக்கவேண்டும். இல்லையென்றால் அவர்கள் எந்த இடத்தைச் சேர்ந்த அகதிகளாயிருந்தாலும்-எந்த இனத்தைச் சேர்ந்த அகதிகளாயிருந்தாலும் பலனில்லை!" என்றான் கனகலிங்கம் கடைசியாக