பக்கம்:பாலும் பாவையும்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 என்று கேட்டுக் கொண்டே குழந்தை கீதா வந்து சேர்ந்தாள். “வா அம்மா, வா!-நான் ஊருக்குப் போயிருந்தேனோ இல்லையோ. அங்கிருந்து உனக்கு ஒர் அக்கா வாங்கி வந்திருக்கிறேன்..” என்று சொல்லிக் கொண்டே, குழந்தை கீதாவை வரவேற்றான். அவள் குறுக்கிட்டு, "அக்கா இல்லையாமே!-மன்னி வாங்கி வந்திருப்பதாகவல்லவா அண்ணா சொன்னார்!” “அவன் பேச்சை நீ நம்பாதே, கீதா! எங்கேயாவது ஓர் ஆணும் பெண்ணும் கொஞ்சம் நெருங்கிப் பழகினால் போதும்; அவன் உடனே அவர்களை காதலன்-காதலி' என்று சொல்லிவிடுவான்; அது மட்டுமல்ல; வேறு என்னவெல்லாமோ கற்பித்துக்கொண்டு அவன் வீணாக அவஸ்தைப்படுவான்அவசரக் குடுக்கை! உணர்ச்சியுடன் போராட அவனுக்கு முதுகெலும்பு இருந்தால்தானே?-நல்ல ராதாமணி அவன்! தன்னை வைத்துக் கொண்டு உலகத்தைப்பார்ப்பதும், உடனே தனக்குள் உலகம் அடங்கிக் கிடக்கிறது என்று தீர்மானித்துவிடுவதும் அவன் வழக்கமாய்ப் போச்சு!-தான் பலவீனனோ இல்லையோ, அப்படியே எல்லோரும் இருப்பார்கள் என்பது அவனுடைய எண்ணம்!” என்றான் கனகலிங்கம் ஆத்திரத்தோடு. கீதா சிரித்துக்கொண்டே, “இல்லை அண்ணா, இல்லை; அண்ணா அக்காவைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. நான்தான் விளையாட்டுக்காகச் சொன்னேன்!” “நீ குழந்தை உனக்கு என்ன தெரியும்?” என்று அவளுடைய ஆரஞ்சு கன்னத்தை ஆசையுடன் கிள்ளித் தன் குற்றமற்ற அன்பை வெளிப்படுத்திக் கொண்டான் கனகலிங்கம். 'நான் என்ன அண்ணா செய்யவேண்டும்?” என்று குதிகுதியென்று குதித்துக்கொண்டே கேட்டாள் கீதா. “நீ ஒன்றும் செய்யவேண்டாம்; நான் வெளியே போய்விட்டு வரும் வரை அக்காவுக்குத் துணையாயிருந்தால் போதும்” என்றான் கனகலிங்கம்.