பக்கம்:பாலும் பாவையும்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#44 துரத்துக்கு முற்றி விட்டானா, அவன்?-இனிமேல் அவனுக்கு இங்கே சாப்பாடும் கிடையாது; நீ யும் அவனுடன் சேர வேண்டாம் என்று சொல்லி, இந்த மாதம் 鼓 சாப்பாட்டுக்காக கொடுத்த இருபது ரூபாயையும் அம்மா என்னிடம் திருப்பிக் கொடுத்தனுப்பி விட்டார்கள்எனக்கு என்ன சொல்வது, என்ன செய்வது என்று ஒன்றும் தோன்றவில்லை.” “அது தான் சொல் ல வேண்டியதையெல்லாம் சொல்லி விட்டாயே. இனிமேல் தோன்றுவதற்கு என்ன இருக்கிறது!’ என்றான் கனகலிங்கம், அதற்குள் ஒருவாறு தன்னைச் சமாளித்துக் கொண்டு. “என்மீது குற்றம் ஒன்றுமில்லை; கீதாதான்." "அது சரி; உன்னைப்போல் அவளுக்குப் புளுகத்தெரியுமா, என்ன?-இனிமேல்தான் பெரியவர்களிடமிருந்து அந்தக் 'கலை”யை அவள் கற்றுக்கொள்ள வேண்டும்?” என்றான் கனகலிங்கம். சிறிது நேரம் இருவரும் மெளனமாக இருந்தார்கள். எதிர்பாராத விதமாகத் கீதா அழுதுகொண்டே அங்கு வந்து அவர்களுடைய மெளனத்தைக் கலைத்தாள். “இங்கே வா அம்மா. வா!-ஏன் அழுகிறாய்? நீ நல்ல பெண்ணாச்சே. அழவே மாட்டாயே!” என்று அன்புட்ன் அவளுடைய தலையைக் கோதி விட்டுக் கொண்டே, அவளைத் தூக்கித் தன் மடியில் உட்காரவைத்துக்கொண்டான் கனகலிங்கம், "அண்ணா இல்லே...அண்ண்ா இல்லே...அண்ணா. இல்லேஅது என்னை அடிச்சுது!’ என்றாள் அவள் விக்கலுக்கும் விம்மலுக்கும் இடையே. -