பக்கம்:பாலும் பாவையும்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 விடக் கனகலிங்கம் எவ்வளவோ மேல் என்ற தீர்மானத்துக்கும் அவள் உடனே வந்துவிட்டாள் அதற்குப் பிறகு அங்கே இருக்க அவளுக்குப் பிடிக்குமா? இருந்தால்தான் சியாமளா அவளை இருக்க விடுவாளா?விஷயம் ரஸாபாஸ்மாகப் போவதற்குள் தானே அந்த வீட்டை விட்டு வெளியேறி விடுவது நல்ல தென்று தோன்றிற்று அவளுக்கு. அன்றிரவே சியாமளாவிடம் விடை பெற்றுக் கொண்டு அவள் கிளம்பினாள் “என்னை மறந்துவிடாதே. அகல்யா! அடிக்கடி இங்கே வந்து போய்க் கொண்டிரு!” என்று சியாமளா அவளை வழியனுப்பும்போது சொன்னாள் "உன்னையா! இனிமேலா'-நான் மறக்க மாட்டேன், சியாமளா!” என்று சொல்லிவிட்டு, அகல்யா நடையைக் கட்டினாள் அப்படி நடக்கும்போது, 'இப்பொழுதெல்லாம் இந்த உலகத்தில் மனிதர்கள் எவ்வளவு அழகாக நடிக்கக் கற்றுக்கொண்டு விட்டார்கள் என்று எண்ணி அவள வியந்தாள் அகல்யாவின் தலை மறையும் வரை அவளையே பார்த்துக்கொண்டிருந்து விட்டுச் சியாமளா திரும்பினாள் "கடைசியில் என்ன இருந்தாலும் பெண் பெண்தான்!” என்பதை நீ காட்டி விட்டாயே?’ என்றான் மணிவண்ணன் "நீங்களும் என்ன இருந்தாலும் ஆண் ஆண்தான்! என்பதைக் காட்டி விட்டீர்கள்!” என்றாள் சியாமளா, தலையை ஒரு வெட்டு வெட்டிக் கொண்டே 泳 宋 ※ இனி என்ன சொன்னாலும் சரி, என்ன செய்தாலும் சரி. அவர்தான் நமக்குக் கதி! என்று துணிந்து கனகலிங்கததின் அறையை நோக்கி நடந்தாள் வழியில் நாதஸ்வரமும் கொட்டு மேளமும் பாண்டு வாத தியங்களும் முழங்க, காஸ் லைட'டுக ள கண்ணைப்பறிக்க, மணமகன் ஊர்வலமொன்று குறுக்கிட்டது