பக்கம்:பாலும் பாவையும்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 வரவில்லையா?” என்று பரபரப்புடன் கேட்டாள். ராதாமணி ஒன்றும் பதில் சொல்லவில்லை. மெளனமாக மேலே சென்றான்; அகல்யா என்னமோ, ஏதோ என்று அவனைப் பின்தொடர்ந்து சென்றாள் இருவரும் அங்கே நேருக்கு நேராக நின்று ஒருவர் முகத்தை ஒருவர் ஊடுருவிப் பார்த்தார்கள். அகல்யாவுக்கு ஆத்திரம் தாங்கவில்லை; “அவர் வரவில்லையா?” என்று மீண்டும் கேட்டாள். அவ்வளவுதான்; அழுகை பொத்துக் கொண்டு வந்து விட்டது அவனுக்கு முகத்தைக் கைக்குட்டையால் மூடிக்கொண்டு வெட்கத்தை விட்டு வீரிட்டு அழுதான். 'ஏன், என்ன நடந்தது?-சொல்லுங்களேன்?” என்று துடித்துக்கொண்டே கேட்டாள் அவள். “நீங்கள் இங்கிருந்து சென்ற பிறகு அவன் இரண்டு நாட்கள்தான் இந்த உலகத்தில் உயிரோடு இருந்தான் மூன்றாவது நாள் காலை யாரோ ஒரு கொலைகாரன் அவன்மேல் காரை ஏற்றி அவனைக் கொன்றுவிட்டான்' என்று விக்கலுக்கும் விம்மலுக்கும் இடையே அவன் சொல்லி முடிப்பதற்குள், அகல்யா தொபுகடீர் என்று கீழே சாய்ந்தாள் அதற்குப் பிறகு இதயத் துடிப்பைத் தவிர வேறு எந்தவிதமான துடிப்பும் அவளுடைய தேகத்தில் இல்லை 求 来 米 அன்று மாலை மூர்ச்சை தெளிந்து எழுந்தபோது, தனக்குப் பக்கத்தில் யாரோ ஒரு முதியவள், உட்கார்ந்ததிருப்பதைக் கண்டு அகல்யா விழித்தாள் ராதாமணி குறிப்பறிந்து, “வேறு யாருமில்லை, என் தாயார்தான் நீங்கள் மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டதும் நான் ஓடோடி சென்று அவர்களை உதவிக்கு அழைத்துக் கொண்டு வந்தேன்' என்றான்