பக்கம்:பாலும் பாவையும்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189 ‘என்ன இருந்தாலும பெறற மனம் பித்து என்பார்கள ஒருவேளை அம்மா நமக்காக இரங்கினாலும் இரங்கலா மல்லவா?-இந்த நமபிக்கையின் துணையைக் கொண்டு அவள நடந்தாள், நடந்தாள், நடந்தாள, நடந்து கொண்டே இருந்தாள சியாமளா இருக்கும் தெருவை நெருங்கியதும் அவள் முகம் அவளையும் அறியாமல் சிணுங்கிற்று 'நல்ல வேளை, அவளிடம் எல்லாவற்றையும் சொல்லித் தொலைக்காமல் இருந்தோமே!’ என்ற ஆறுதலுடன் அவள அடுதத தெருவில் காலடி எடுத்து வைத்தாள் அங்கே, தன்னைப்பற்றி வேறு யாரையும் விசாரிக்க வேண்டிய சிரமததை அகல்யாவின் தாயார் அவளுக்கு வைக்கவில்லை; இதோ நான் இங்கேதான் இருக்கிறேன்' என்று சொல்வதுபோல எச்சில் இலையும் கையுமாக அங்கிருந்த ஒரு வீட்டின் முன் காட்சியளித்தாள அவளைக் கண்டதும் அகல்யாவின் உள்ளத்தில் மீண்டும் புயல் வீசிறறு அதை ஒருவாறு சமாளித்துக் கொண்டு அவள் அந்த வீட்டை நெருங்கினாள் அதற்குள் அவளுடைய தாயார் எச்சில் இலையைக் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்து விட்டு, போகிற போக் கில் வராந்தாவில் எரிந்து கொணடிருந்த விளக்கையும் அணைத்துவிட்டு உள்ளே சென்றாள். 'எச்சில் இலைக்கு நேரும் கதிதான் இனி நமக்கும் நேரும் போலிருக்கிறது' என்று எண்ணிக்கொண்டே, அகல்யா துணிந்து அந்த வீடடை நோககி முன்னேறினாள வராந்தாவில் இருந்த ஒட்டுத திண்ணையை அடைந்ததும்