பக்கம்:பாலும் பாவையும்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பெண்ணுக்காக ஆணும் தியாகம் செய்தால் வாழ்க்கை எவ்வளவு இன்பகரமாயிருக்கும்!’ என்று அகல்யா நினைத்தாள். இவ்வாறு நினைத்ததும், 'இப்பொழுதுகூட் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை; நீ எப்பொழுது வேண்டுமானாலும் தியாகம் செய்யலாம்' என்றது அவளுடைய அந்தராத்மா. ‘எப்படி?’ என்று கேட்டது அவள் மனம். 'இது தெரியாதா, உனக்கு? அவனுக்காக நீ உன் உயிரை விட்டுவிடலாம்.....!" இதைக் கேட்டதும் அவள் மனம் சீறி எழுந்து, 'அந்தத் துரோகிக்காக நான் ஏன் உயிரை விடவேண்டும்? அதனால் நான் அடையப்போகும் நன்மைதான் என்ன?-மற்றவர்களைப் போல நானும் சமூகத்தின் அனுதாபத்தை வேண்டுமானால் பெறலாம். செத்துத்தான் அந்த அனுதாபத்தைப் பெற வேண்டு மென்றால் எனக்கு அது வேண்டவே வேண்டாமே! என்று ஆர்ப்பரித்தது. அதைத் தொடர்ந்து, "ஆம், சமூகத்துக் கும் நான் பலியாக மாட்டேன்; அந்தச் சண்டாளனுக்கும் பலியாக மாட்டேன். இரு தரத்தாரும் 6 எனக்கு வேண்டு மானால் ப யா கட்டும்” என்று சொல்லிக் கொண்டே அகல்யா எழுந்து நின்றாள். அப்போது கட்டுக் குலைந்திருந்த مكيو அவள் புடவை மெல்ல மெல்ல நழுவிக் கீழே விழுந்தது. சட்டென்று அதை எடுத்துச் சரிப்படுத்திக் - கொள்வதில் முனைந்தாள் அவள். அதே சமயத்தில் அந்த அறையின் கதவை யாரோ டொக், டொக்' என்று தட்டினார்கள். “யார் அது?” என்று கேட்டாள் அகல்யா. "நான்தான்!” என்றான் கனகலிங்கம். “ஓ, பீஷ்மாச்சாரியாரா?-வாருங்கள், வாருங்கள். உங்கள்