பக்கம்:பாலும் பாவையும்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 அந்தக்காதலுக்காகத் தன்னை ஒருவனுக்கு அர்ப்பணித்தாள் அவன் அவளைக் கைவிட்டான். அதற்காக அவள் செத்துப்போக விரும்பவில்லை; வாழவிரும்புகிறாள். ஆண்களுக்கு மட்டும் அந்த உரிமையை அளிக்கும் சமூகம் பெண்களுக்கு அளிக்க மறுக்கிறது-இது அக்கிரமந்தானே?-இந்த நிலையற்ற எண்ணத்துக்கு ஒரு கணம் உள்ளானதும், “உன் மனத்தைப் புண்படுத்தி விட்டேனா என்ன?-சொல்லு அகல்யா, சொல்லு?” என்று அவன் குழைந்தான். 'கலகல வென்று கண்ணிரை உதிர்த்துக் கொண்டே அவள் அவனை ஏற இறங்கப் பார்த்தாள். "அழாதே, அகல்யா!' என்றான் கனகலிங்கம். அந்தச் சமயத்தில் அகல்யாவுக்கு என்ன சொல்வது, என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. "ஆமாம் போங்கள்!” என்று அடித்துச் சொல்லிவிட்டு, அதேமாதிரி அந்த அறையின் கதவையும் அடித்துத் திறந்துகொண்டு அவள் வெளியே வந்து நின்றாள். அப்போது மணி ஒன்று, இரண்டு, மூன்று என்று பத்து அடித்து ஓய்ந்தது. கனகலிங்கம் அவளுக்குப் பின்னால் வந்து நின்று, “உலகம் விசித்திரமானது!’ என்றான். “உங்களைப்போன்ற ஆண்கள் இருக்கும் வரை உலகம் விசித்திரமானதாய்த்தான் இருக்கும்” என்றாள் அகல்யா. “இல்லை, உன்னைப் போன்ற பெண்கள் இருக்கும் வரைதான் உலகம் விசித்திரமானதாயிருக்கும்.” “என்னைப் போன்ற பெண்கள் உங்களை என்ன செய்கிறார்களாம்?” “ஒன்றும் செய்ய வில்லை: முறைப்படி கல்யாணம் செய்துகொண்டு ஆண்களை அடிமை கொள்வதற்குப் பதிலாக, அவர்கள் முறைதவறிக் காதல் செய்து தங்களை ஆண்களுக்கு அடிமைகளாக்கிக்கொண்டு விடுகிறார்கள்!”