பக்கம்:பாலைக்கலி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-பாலைக்கலி 35 சொற்பொருள்: 1. சிவந்து - கோபித்து கோபத்தால் கண்கள் சிவத்தலால் இவ்வாறு கூறினர். 2. கரி வறல் - கரிந்து வறண்ட அந்நிலத்தில், 3. பொறி - புள்ளி. 4. தேர் அல்தேர் - பேய்த்தேர். 5. உயங்க வருந்த 10. யாழ: அசை, 12. அல்லிதாமரைப் பூவின் அகவிதழ்கள். அரக்கு - செவ்வரக்கு. 17. விலங்கு மான் - விலங்காகிய சிங்கம். 18. புரை ஒத்த 19. தளி - மழைத்துளி. 20. முளி உலர்ந்த அரில் - புதர். பொத்திய மூண்ட 21. வளி - காற்று. 27. காண்மார் - காண்பதற்காக 13. வெறுத்துத்தான் போகின்றனை (திருடன், காவற்காரனின் வீட்டிலேயே சென்று ஒளித்த கதை போலப், பிரிந்துபோக நினைத்த ஒருவன், தன் எண்ணத்தைத் தலைவியிடம் நேரே சொல்லத் துணியாமல், அவள் தோழியிடம் சென்று சொல்லி விட்டான். அவளோ "இனிமையாகப் பேசியவை எல்லாம் மறந்து, போகின்றேன்' என்று கூறுகிறாயே! உன்னை உணர்ந்துவிட்டேன்; எங்களை வெறுத்துத்தான் நீ பிரிந்து போகிறாய்” என்று சீறுகின்றாள். அவன், முன்னர்த் தலைவியைப் புகழ்ந்து கூறியதை எல்லாம் அவனுக்கு நினைவுபடுத்தி அவனை இடித்துப் பேசுகின்றாள்.) 'அணை மருள் இன் துயில் அம் பணைத் தட மென் தோள், துணை மலர் எழில் நீலத்து ஏந்து எழில் மலர் உண் கண், மண மெளவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண் பல், மணம் நாறு நறு நுதல், மாரி வீழ் இருங் கூந்தல், அலர் முலை ஆகத்து, அகன்ற அல்குல், 5 சில நிரை வால் வளை, செய்யாயோ!' என, பல பல கட்டுரை பண்டையின் பாராட்டி, இனிய சொல்லி, இன்னாங்குப் பெயர்ப்பது, இனி அறிந்தேன், அது துனி ஆகுதலே. - 'பொருள் அல்லால் பொருளும் உண்டோ? என, யாழ நின் 10 மருளி கொள் மட நோக்கம், மயக்கப்பட்டு அயர்த்தாயோ? 'காதலார் எவன் செய்ப, பொருள் இல்லாதார்க்கு? என, ஏதிலார் கூறும் சொல் பொருளாக மதித்தாயோ? செம்மையின் இகந்து ஒரீஇப் பொருள் செய்வார்க்கு, அப் பொருள் இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயோ? 15 அதனால், எம்மையும் பொருளாக மதித்தீத்தை நம்முள் நாம் கவவுக் கை விடப் பெறும் பொருட் திறத்து அவவுக் கைவிடுதல்; அது மனும் பொருளே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/43&oldid=822035" இலிருந்து மீள்விக்கப்பட்டது