பக்கம்:பாலைக்கலி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-பாலைக்கலி 41 நம்மைத் துறந்து போகும் வழியிடையிலே, கல்லின் மேல் உண்டான வெப்பம் நீங்குமாறு செறிந்த மழைத்துளிகளைச் சிதறுவாயாக’ என்று இனிய புகழ்பெற்ற மேகத்தை நாம் வேண்டினால், அதுவும் பொருத்தம் உடையதாகுமோ? 'அணிகள் புனைந்தவளே! இங்கே நாம் புலம்பித் தவிக்கின்றோம். பகையுண்டென்றும் கருதாது, பொருள் தேடி வருதலை விரும்பிக் காட்டு வழியாகச் சென்றுள்ளார் நம் காதலர். பூந்தளிர்களும் வாடச்செய்கின்ற நின் பெருஞ் சினந்தணிந்து சற்றே அவர்க்கும் அருள்வாயாக!' என்று, செறிந்த கதிர்களைப் பொழியும் கனலியான கதிரவனை நாம் வேண்டினால், அஃது இயைபு உடையதாமோ? 'ஒளிமிகுந்த ஆபரணங்கள் பூண்டவளே! இங்கே நாம் துயரமுற்று வருந்த, பொருள்மேல் கொண்ட ஆசைமிகுந்து நம் காதலர் பாலைவழியாகச் சென்றுள்ளனர். அவ்வழியிலே, 'உலர்ந்த சிறு புதர்களிலே பற்றியெரிகின்ற காட்டு நெருப்பிலே தங்கிவரும் வெப்பம் மாறித், தண்’ என்ற நிலையால் அவன்மேல் வீசுவாயாக!' என்று காற்றுத் தேவனை நாம் வாழ்த்தி வேண்டுதல் பொருத்தமாயிருக்குமோ?” என்று சொல்லி, நீ ஏனம்மா கவலையுறுகின்றாய். சேமொழி: செய்வினையாற் பெறுகின்ற பொருளின் சிறப்பை எண்ணிச் சென்றவரிடத்து, இவ்வாறெல்லாம் தெய்வத்தின் அருளை வேண்டி நீவாடுதல் வேண்டாம்.'உலகமே வறட்சியால் துயருற்ற காலத்தும், மழையைப் பெய்விக்கும் கற்புச் சக்தி உடையவளான இவன் மனைவியானவள், தன் அழகு நிறம் ஒடிப்போகப் பசலை பாய்ந்து விடுதலும் நிகழுமே என்று, அறக்கடவுள் தானே கருதி, அவர் முயற்சியிடமெல்லாம் சென்று, எத்தகைய துன்பங் களையும் விலக்கி நிற்கும். நீதான் அவரைக் குறித்து ஏதும் கவலையடையாதே! கருத்து: மழையும், கனலியும், காற்றும் வேண்டுவமோ என்றவளுக்கு 'உன் கற்பின் பெருமையால், அறக்கடவுள் தானே சென்று உதவும்போது, நீ வேண்டுவது ஏன்? என்று, அவள் கற்பது உயர்வைக்கூறி, அவள் மனக் கலக்கத்தைப்போக்குகிறாள் தோழி. சொற்பொருள்: 1. பாடு - உறக்கம். பைதல் - வருத்தம் உடையவாகி, 2. வாடுபு - கெட்டு. வனப்பு ஒடி - அழகுபோய். வணங்குஇறை - வளைந்த முன்கை 6. துன்னி - பொருள்மேல் ஆசை கொண்டு. 7. எழிலி - மேகம். இரப்பவும் வணங்கிக் கேட்பவும். 10. முன்னிய - போகக் கருதிய 12. கனலி - ஞாயிறு. 13.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/49&oldid=822041" இலிருந்து மீள்விக்கப்பட்டது