பக்கம்:பாலைக்கலி.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-பாலைக்கலி 73 உரைக்கின்றான்; அவனுரையைக் கேள். துயரத்தை விட்டு, அவரை வரவேற்று மகிழ, நாம் விருந்து சமைப்போம், வா. சொற்பொருள்: எஃகு கத்தரிகை, 2. துவர் மணல் - புலர்ந்த மணல். 3. நெறித்தன்ன - பிடித்துவிட்டாற்போன்ற நெறிகொள - ஒழுங்காக வீழ்ந்து கிடக்க 6. துணிநீர் தெளிந்த நீர் 8, அலர் செல்லா - பருவம் வருந்துணையும் அலராத 10. நல்லவர் - நல்ல மகளிர் நுடக்கம் - அரங்கு ஆட்டம். நயம் வந்த விரும்பத்தக்க 1. இணர் ஊழ்த்த - மலர்க் கொத்துக்களை ஈன்ற 16 ஏய்க்கும் - ஒக்கும்.17. போது - மலரும் பருவத்தில் உள்ளே பேரரும்பு. குரற்கு கூந்தலுக்கு 19. அயர்ந்தீகம் - விருந்தேற்றுப் போற்றுவம் 32. என்னை மறந்தாரோ? ("இளவேனில் வந்ததே! அவர் வரக் காணேனே! என்னை அறவே அவர் மறந்தாரோ?' என்று, தன் தோழியிடம் கூறி வருந்துகிறாள் ஒரு தலைவி. அவளுக்குத் தேறுதல் கூறுகிறாள் அவள் தோழி) s 'வீறு சால் ஞாலத்து வியல் அணி காணிய யாறு கண் விழித்த போல், கயம் நந்திக் கவின் பெற, மணி புரை வயங்கலுள் துப்பு எறிந்தவை போல, பிணி விடு முருக்கு இதழ் அணி கயத்து உதிர்ந்து உக, துணி கய நிழல் நோக்கித் துதைபு உடன் வண்டு ஆர்ப்ப, 5 மணி போல அரும்பு ஊழ்த்து மரம் எல்லாம் அலர் வேய, காதலர்ப் புணர்ந்தவர் கவவுக் கை நெகிழாது, தாது அவிழ் வேனிலோ வந்தன்று; வாரார், நம் போது எழில் உண்கண் புலம்ப நீத்தவர்! எரி உரு உறழ இலவம் மலர, 10 பொரி உரு உறழப் புன்கு பூ உதிர, புது மலர்க் கோங்கம் பொன் எனத் தாது ஊழ்ப்ப, தமியார்ப் புறத்து எறிந்து எள்ளி, முனிய வந்து, ஆர்ப்பது போலும் பொழுது என் அணி நலம் போர்ப்பது போலும் பசப்பு. 15 நொந்து நகுவன போல் நந்தின, கொம்பு, நைந்து உள்ளி உகுவது போலும், என் நெஞ்சு, எள்ளி, தொகுபு உடன் ஆடுவ போலும், மயில், கையில் உகுவன போலும், வளை; என் கண் போல் இகுபு அறல் வாரும் பருவத்தும் வாரார்; 20 மிகுவது போலும், இந் நோய். நரம்பின் தீம் குரல் நிறுக்கும் குழல் போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/81&oldid=822077" இலிருந்து மீள்விக்கப்பட்டது