பக்கம்:பாலைச்செல்வி.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 இ. புலவர் கா. கோவிந்தன் உடனழைத்துப் போகாமை மட்டுமன்று; உன்னைத் தனியே விடுத்துத் தான் மட்டும் தனித்துப் போவதும் இல்லை. 'போவேன்' என்று அவன் கூறியது பொய்யேயல்லது உண்மையன்று. விளையாட்டிற்காகவே அவன் அவ்வாறு கூறினான். 'உன்னைத் தனியே விடுத்துப் பிரிந்து போகிறேன், கொடிய காட்டு வழியைக் கடந்து செல்லப் போகிறேன்! என்று கூறியதெல்லாம், அதைக் கேட்டு, நீ அஞ்சி, ஆறாத்துயர் கொண்டு அழ, அக் காட்சியைக் கண்டு மகிழ்தற்கேயாகும். உண்மையில் அவன் போகான். போகும் எண்ணம் உடையனாயின், உன்னிடம் ஒன்றும் உர்ையாதே போயிருப்பன்; சொல்லிப் போவதாயினும், செல்லும் வழி, நல்ல வழி; ஏதம் இன்றிச் - செல்லற்காம் இனிய வழி; ஆகவே, விரைந்திவண் வந்து சேர்வன். வருந்தற்க!' எனச் செல்லும் வழியின் பொல்லாங்கை மறைத்துப் பொய் கூறிப் போயிருப்பன். அதை விடுத்துப் போவதற்கே இசையாது வருந்தும் நின்பால், போகும் வழியின் நிலை தெரியுமா? ಅ15 எவ்வளவு கொடுமையுடையது தெரியுமா? எனச் செல்லும் வழியின் அல்லல்களை, ஒன்று விடாது, அடுக்கிக் கூறியிருப்பனோ? மேலும் அவன் கூறுங்கால், அது போவதற்கு அரிய வழி-போக்கு அருவெஞ் சுரம்! என்று குறிப்பிட்டான் என்று கூறிய நீ, அவன் அவ்வாறு கூறியதன் பொருள் யாது, அத் தொடரில் தொக்கி நிற்கும் அவன் கருத்து யாது என்பதை உய்த்துணர எண்ணாதது ஏனோ வழி போவதற்கு அரியது என்றால், அவ்வழியில் யானும் போகேன்! என்பதைக் குறிப்பால் உணர்த்திய தாகாதோ? இதை யெல்லாம் உணராது, அவன் போய் விடுவான் என்று வருந்துகின்றனையே! என்னே நின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/106&oldid=822106" இலிருந்து மீள்விக்கப்பட்டது