பக்கம்:பாலைச்செல்வி.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 அறநெறியும் ஆக்கமும் காதலையும் கடமையையும் ஒருசேர மதிக்கும் உயர்ந்த உள்ளம் வாய்க்கப் பெற்ற ஓர் இளைஞன், தன் மனம் விரும்பும் மாண்புடையாள் ஒருத்தியை மணந்து, மனையற வாழ்வு மேற்கொண்டான். சின்னாட்கள் வரை அவள் பேரழகிற்கும் பெருகிய அன்பிற்கும் அடிமையாகி, அவளை இமைப்பொழுதும் பிரியாது அவள் அழகையும் அரிய குணங்களையும் பாராட்டிப் பேரின்பம் பெற்று மகிழ்ந்திருந்தான். ஒருநாள், தானும், தன் மனைவியும் ஒன்று கூடி மேற்கொண்டுள்ள இல்லற வாழ்வு இன்ப யிடையறவு அற்று, இனிது நடைபெற வேண்டின், அதற்குப் பெரும் பொருட்டுணை வேண்டும் என உணர்ந்தான். அவள்பால் கொண்ட காதல் மயக்கத்தால், தன் கடமையை மறந்துவிடின், மனையற வாழ்வு. மாண்பிழந்து போம் எனவும் உணர்ந்தான். உணர்ந்ததன் பயனாய்த் தன் மனைவி.பால் சென்றான். முதலில் மென்மையால் தலையணையையும், வடிவு வனப்புக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/109&oldid=822109" இலிருந்து மீள்விக்கப்பட்டது