பக்கம்:பாலைச்செல்வி.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 இ. புலவர் கா. கோவிந்தன் செல்கின்றேம்; காதல் கொண்டவர் பொருளற்ற வறியராயின், அவரால் அக்காதற் பயனைப் பெறுதல் இயலாது; பொருள் இல்லாதார் காதல் கொண்டு யாது பயன் அவரால் அக்காதற் பயனைப் பெறுதல் இயலாதே! என்று கூறும் உள்ளத் தெளிவற்றோரும் உலகில் உள்ளனர். அவர்கள் கூறுவனவற்றை நீயும் உண்மையென உணர்ந்து விட்டனையோ? அன்ப! உண்மையான காதலைவிட உலகில் சிறந்தது எதுவும் இல்லை. ஒருவர் கொண்ட காதல் உண்மையை உள்ளத் துய்மையை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய தாயின், அக்க்ாதல் உடையார்க்கு, உலகில், எவ்விதக் குறையும் இல்லை. அவர் வாழ்க்கையில் எது இல்லை யாயினும், அதனால் அவர் காதல் கருகிவிடாது. வறுமையால் வாடுவதோ, வாளால் வாழ்விழந்து போவதோ காதலுக்கு இல்லை. உலகெலாம் ஒன்று திரண்டு, அவர் காதல் வாழ்விற்கு உறுதுயர் விளைக்க முனையினும், அது, அவ்விடையூறுகளை யெல்லாம் இருக்கும் இடம் அறியாவாறு அழித்து, வெற்றி கொண்டு வாழும் வீறுடையது. ஆகவே, நிலையற்ற பொருளின் துணை அற்றுவிடுவதால், அது வாழ்விழந்து போய் விடாது. ஆதலின், பொருள் இல்லையேல், காதல் இல்லை! ஆகவே, அக்காதற் பயனை ஆரத் துய்க்கத் துடித்து நிற்கும் நான். அப் பொருளைத் தேடிச் செல் கின்றேன்! என்று கூறுவது, கனியிருப்பக் காய் கவரும் கயவர் செயல் போலாம். நிற்க. - "உலகில் உயர்ந்தது பொருளே என்றும், காதற் பயன் அளிப்பதும் அப் பொருளே என்றும் கூறுவார் உரைகளை யும் உண்மையென்றே ஒப்புக் கொள்வதாயினும், பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/112&oldid=822113" இலிருந்து மீள்விக்கப்பட்டது