பக்கம்:பாலைச்செல்வி.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இத் 11 தேடும் முயற்சி இப்போது பொருந்துவதன்று. பொருள் வேண்டும்; உலகில் உள்ளார் ஒவ்வொருவரும் பொருள் ஈட்டியே வாழ்தல் வேண்டும்; ஆனால், அப்பொருள், அற வழியில் வருதல் வேண்டும். பொருள் வேண்டும் எனும் பேராசையால், அப் பொருளை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று எண்ணி, முறையல்லா முறைகளை மேற்கொண்டு, அறமல்லா வழிகளிற் சென்று, செல்வத்தைச் சேர்த்தல் செந்நெறியாகாது. பிறர் அழ அழத் தான் பொருளிட்டி, வாழ்வதோ, பிறர் பழிக்கத்தக்க பொருள்கள்மீது பற்றுக் கொள்வதோ கூடாது. வஞ்சனை யால் வந்த பொருள் வாழ்வளிக்காது. பொருள், பயனோடு புகழும் உடையதாதல் வேண்டும். புகழ்கெட வரும் பொருள் பொருளாகாது. துயர் உறும் காலம் வரினும், உள்ளத் துரயார், பழியொடு பட்ட பொருளை, அது எத்துணைப் பெரிதாயினும், அடைய எண்ணார். அவ்வாறு பிறர் வருந்தி அழ, பிறர் பழிக்க, வஞ்சனையால், அறநெறி கடந்து ஈட்டிய பொருள், அதை ஈட்டியவர்க்கு இன்பம் பயத்தற்கு மாறாக, இம்மை மறுமை ஆகிய இருநிலையிலும் எல்லையில்லாத் துன்பமே பயக்கும். அவர்க்கு அவர் ஈட்டிய அப் பொருளே பகைமையாம். இதை நீ உணர்தல் வேண்டும். பொருள் தேடும் முயற்சி மேற்கொண்டு, நீ பிரிந்து போய்விடுவையேல், நின் பிரிவுத் துயர் பொறாது, இவள் உயிர் இழத்தல் உறுதி. எவளுடைய இன்ப வாழ்விற்காக என்று நீ, பொருள் தேடிப் போக எண்ணுகின்றனையோ, அவள் இறப்பிற்கு அப்பொருளே காரணமாமாயின், அத்தகைய பொருளைத் தேடிப் போதல் பொருந்துமோ? அது அறிவுடையோர் செயலாமோ? ஆகவே, அன்ப! எவ்வழி நோக்கினும், பொருள் தேடிப் போகும் நின் போக்கு, இந்நிலையில் பொருந்தாது. நீயும் நின் மனைவியும் மேற்கொண்டுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/113&oldid=822114" இலிருந்து மீள்விக்கப்பட்டது