பக்கம்:பாலைச்செல்வி.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 இ. புலவர் கா. கோவிந்தன் செயலையும் தளிர்ஏய்க்கும் எழில்நலம்; அந்நலம் பசலையால் உணப்பட்டுப் பண்டைநீர் ஒழிந்தக்கால் பொய்யற்ற கேள்வியாற் புரையோரைப் படர்ந்துநீ மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ? 15 தீங்கதிர் மதிஏய்க்கும் திருமுகம், அம்முகம் பாம்புசேர் மதிபோலப் பசப்பூர்ந்து தொலைந்தக்கால் பின்னிய தொட்ர்நீவிப், பிறர்நாட்டுப் படர்ந்துநீ, மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ? புரிஅவிழ் நறுநீலம் புரைஉண்கண் கலுழ்பு ஆனாத் 20 திரிஉமிழ் நெய்யேபோல் தெண்பனி உறைக்குங்கால்; என வாங்கு, அனையவை போற்றி, நினைஇயன நாடிக்காண்; வளமையோ வைகலும் செயலாகும்; மற்று இவண் முளைநிரை முறுவலார் ஆயத்துள் எடுத்தாய்ந்த 25 இளமையும் தருவதோ இறந்த பின்னே.” தலைமகன் பிரிவுணர்ந்த தோழி, தலைவியின் ஆற்றாமை, இழந்தால் பெறலாகா இளமையின் அருமை, எக்காலத்தும் பெறலாகும் பொருளின் சிறுமை ஆகிய வற்றைக் கூறிச் செலவழுங்குமாறு வேண்டியது இது. 1. அரிமான்-சிங்கம்; சிலை-வில் செய்யப் பயன்படும் ஒரு மரம்;2. புரிநாண்-முறுக்குண்ட நாண்,புடையில்-தெறித்து எழுப்பும் ஒலியால், 3. இணைப்படை-ஒன்று சேர்ந்த பல படை 4. கணைத்தொடை-அம்பேவுதல்; 5. எருத்து-கழுத்து, எறுழ்நோக்குவலிய பார்வை, இரலை-கலைமான், 6. மருப்பு-கொம்பு; மறித்து-முறுக்குண்டு, 7. உருத்த-கொடிய, 9. புறமாறியஇல்லாமற் போன; 10. புறம்புரிபு, நீ மாறி என மாற்றுக; புறம்புரிபு-புறப்பொருளை விரும்பி, 11. பெயர்த்தரல்-மீட்டுத்தரல்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/124&oldid=822126" இலிருந்து மீள்விக்கப்பட்டது