பக்கம்:பாலைச்செல்வி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி 11 யெதுவும் விழலுக்கு இறைத்த நீராய் வீணாம், என்ற இத் தெளிந்த உணர்வு அத் தோழிக்கு இருப்பதால், அவன் போக்கறிந்து அஞ்சினாள். அவள் அச்சத்திற்குப் பிறிதொரு காரணமும் இருந்தது. அவன் செல்லும் காலமும், கடந்து செல்ல வேண்டிய வழியும் செல்லத் தகுதியற்றிருந்தன. கோடை யின் கொடுமை மிக்க காலம் அது. பொன்னாலும், வெள்ளியாலும், இரும்பாலும் கோட்டைகள் அமைத்து, அமரர்க்கு அழிவு தந்து வந்த அவுனர்களை அழிக்கத் திருவுளம் கொண்ட சிவன், அவ்வவுணர்க்கு ஆற்றலும், ஆணவமும் தருவன அக் கோட்டைகளே; அவை அழிந்து விடின், அவரும் அழிவர் என அறிந்து, அவற்றை அழிக்கத் தன் நெற்றிக் கண்னைத் திறந்து காட்டியக்கால், அக்கோட்டைகளை இருந்த இடம் தெரியாவாறு எரித்துச் சாம்பராகிய, அந்நெற்றிக்கண் கக்கிய தீயினும் கொடிதாக, ஞாயிறு நின்று காயும் கொடுமை மிக்கது அக்காலம். அந் நெற்றிக் கண் கக்கிய தீயின் வெம்மையால் வெந்து சாம்பராகிய அக் கோட்டைகள் அழிவுற்றக்கால், தூள் து.ாளாகப் பிளவுண்டு சிதறி வீழ்ந்து கிடந்ததுபோல், கோடை ஞாயிற்றின் கொடுமை தாளாது, மலைகள் வெடித்து வீசிய பாறைகள் சிறியவும் பெரியவுமாய்ச் சிதறி வீழ்ந்து, வழியடைத்துக் கிடக்கும் கொடுமையுடையது அவன் செல்லும் வழி. அத்தகைய கொடிய கோடை காலத்தில், கடத்தற்கரிய கொடுமை மிக்க அவ்வழியில், செல்வார் எவரும், இடைவழியில் ஏதும் உறாது சென்று, இனிதே மீண்டு வருதல் அரிதினும் அரிதாமன்றோ என அவள் அச்சம், பொருள் தேடிச் செல்லுதல் அக் காலத் திற்குப் பொருந்தாது என்ற முடிவை வலியுறுத்திற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/13&oldid=822132" இலிருந்து மீள்விக்கப்பட்டது