பக்கம்:பாலைச்செல்வி.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 மருந்தாகி மனன் உவப்ப ! பேரரசர் வழிவந்த ஓர் இளைஞன், தன் மனம் விரும்பும் மங்கை யொருத்தியைக் கண்டு காதல் கொண்டான். அவளுக்கும் தன்பால் அன்பு உண்டு என்பதை அறிந்த பின்னர் அவளை மணந்து, மனையற வாழ்வு மேற்கொண்டு மகிழ்ந்து வாழ்ந்திருந்தான். அவள்பால் கொண்ட காதல் மிகுதியால் தன் அரசியற் பணிகளையும் ஒரளவு மறந்திருந்தான். ஆயினும், என்றும் அவ்வாறே வாழ்தல் அரசர் குலத்து வந்தார்க்கு ஆகாது. நாடு காத்தல், நட்டார்க்குத் துணை போதல் போலும் நல்ல வினைகளையே என்றும் மேற்கொண்டு வாழ வேண்டியவராய அரசர், அவ்வினைகளை மறந்து, மனையகத்தே மடிந்து கிடத்தல் பெரும் பிழையாம். அப் பிழையால் அவர் அழிதலோடு, அவர் ஆட்சிக் கீழ் வாழும் நாடும், அந்நாட்டு மக்களும் தம் நல்வாழ்வு இழப்பர். மனையகத்தே மகிழ்ந்து வாழ்ந்திருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/133&oldid=822136" இலிருந்து மீள்விக்கப்பட்டது