பக்கம்:பாலைச்செல்வி.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி 133 இவ்வாறு உறக்கம் அற்று, அமைதி இழந்து, நெட்டுயிர்ப்புக் கொண்டு உழல்வதையும் கண்டாள் அவன் மனைவி. அந்நிலை காணக் கலங்கிற்று அவள் உள்ளம். அவன் வாழ்க்கையில், வழக்கத்திற்கு மாறான, இந்நிலைக்குக் காரணம் யாதோ? அவன் உள்ளத்த்ை இவ்வாறு அலைக்கழிக்கும் உறுதுயர் யாதோ? அவன் யாது கருதி இவ்வாறு ஆயினன்? அவன் பால் காணலாம் இம்மாற்றத்தால், தங்கள் அன்பு வாழ்க்கைக்கு யாது கேடு வந்துறுமோ? என்றெல்லாம் எண்ணி எண்ணி ஏங்கிற்று அவள் உள்ளம். அந்நினைவால் நடுங்கிற்று அவள் நெஞ்சம். தன் கணவனின் தடுமாற்றத்திற்காம் காரணம் யாது என்பதைக் காண அவள் உள்ளம் துடித்தது. அரசர் குலத்து வந்தவன் அவன். அரசர் நாடு காக்கும் தொழில் உடையர். அவனுக்கும் அஃது உரித்து. அதற்கேற்ப அவனும் காலையில் படைக்கலங்களைப் பழுது பார்க்கும் பணி மேற்கொண்டிருந்தான். இதுகாறும் இன்னுரை வழங்கி, இன்ப நினைவுகளால் மனத்தை மகிழ்விக்கும் அவன், இரவெல்லாம் மனத் தெளிவின்றி மடிந்திருந்தான். இவற்றைக் கண்டாள் அவள். நாளை அல்லது மறுநாள், நாடு காவல் கருதி, அவன் பிரிந்து போய்விடுவன் என்பதை உறுதி செய்ய இவை போதியவாம் என்பதை உணர்ந்தாள். உணர்ந்த அந்நிலையே, அவளைப் பிரிவுத் துயர் பற்றி அலைக்கத் தொடங்கி விட்டது. மணங் கொண்ட மகிழ்ச்சியால் அவள் பெற்ற புதுப்பொலி வோடு, பண்டு அவள் பெற்றிருந்த இயற்கை அழகும் அவளை விட்டு அகன்றது. காதற் பயன் கைவர்ப் பெறாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/135&oldid=822138" இலிருந்து மீள்விக்கப்பட்டது