பக்கம்:பாலைச்செல்வி.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 145 கடமையை மாண்புற முடித்த மகிழ்ச்சி கொண்டாள். அவள் கூறிய அவ்வறிவுரை இது: “அரும்பொருள் வேட்கையின் உள்ளம் துரப்பப், பிரிந்துறை சூழாதி ஐய! விரும்பி, நீ என்தோள் எழுதிய தொய்யிலும், யாழ நின் மைந்துடை மார்பில் அணங்கும் நினைத்துக்காண்; சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது; 5 ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார்; இளமையும், காமமும் ஒராங்குப் பெற்றார் வளமை விழைதக்கது உண்டோ? உளநாள் ஒரோஒகை தமமுள் தழிஇ, ஒரோஒகை ஒன்றன்கூறாடை உடுப்பவரே ஆயினும் 10 ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை, அரிதரோ! சென்ற இளமை தரற்கு.” தலைமகனால் பிரிவுணர்த்தப்பட்ட தலைவி, அவனுக்கு நாளது சின்மை, இளமையது அருமை, தாளாண் பக்கம், தகுதியது அமைதி, இன்மையது இழிவு, உடைமையது உயர்ச்சி, அன்பினது அகலல், அகற்சியது அருமை முதலாயின கூறிச் செலவழுங்குவித்தது இது. 1. துரப்ப - வலிந்து துரத்த 2. பிரிந்துறை - பிரிந்து வாழும் வாழ்க்கை, சூழாதி - எண்ணற்க, 3. யாழ - அசை, 4 மார்பில் அணங்கு - காதலன் அணைப்பால் காதலி மார்பிற்றோன்றும் தேமல்; 5. முகப்ப - வாரிக் கொள்ள, 8. வளமை விழைதக்கது - செல்வத்திடத்து; விரும்பத்தக்கதொரு சிறப்பு, 9. ஒரோஒகை - ஒருகை; 10. ஒன்றன் கூறாடை - ஓர் ஆடையை இரண்டாக்கிப் பெற்ற ஒரு பகுதி, 11. ஒன்றினார் - உள்ளத்தால் ஒன்றுபட்டவர்; அரிதரோ அரிது, அர், ஓ இரண்டும் அசை. - Lm saoeay–f0

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/147&oldid=822151" இலிருந்து மீள்விக்கப்பட்டது