பக்கம்:பாலைச்செல்வி.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 147 ஒரு வினை கருதி, வெளிநாடு செல்லத் துணிந்தான். அவன் முடிவறிந்த அவன் மனைவி பெரிதும் வருந்தினாள். அவன் செயல் அறிந்து, "இத்துணை இளை யாளை இந்தக் கொடிய கோடை காலத்தில், பிரிந்து போகின்ற இவன் பேதைமையினை என்னென்பது! என ஊரார் கூறிய அலர், அவள் துயரை அதிகமாக்கிற்று. அதைப் பொறாத அவள், அவன்பால் சென்றாள். இயல் பாகவே, சிறிது மிக்க சினம் உடையவள் அப்பெண். குற்றம் செய்தவரை, அக் குற்றம் செய்தவர் யாவரே யாயினும், அக் குற்றத்தை, அவர் முன்னரே எடுத்துக் காட்டி, இடித்துரைத்துத் திருத்த முயலுந் துணிவுடையாள். அத்தகையாள் அவனைப் பார்த்து: - "அன்ப ! என்னைக் கண்டு கர்தல் கொண்ட அன்று, 'பிரியேன்; பிரியின், உயிர் தரியேன்! அறம் அல்லன. செய்தேனும் ஆவன்' என்று, கூறிய நின் சொல்லும், செயலும் உண்மை அல்ல; பொய்யே என்பதை நின் காதல் மயக்கத்தால், கருத்திழந்து போன யான், அப்போது அறியாது போயினேன். அவற்றின் இயல்பு இது என்பதை இன்றே யான் உணர்ந்தேன். பிரியேன் என்று கூறிய நீ, இன்று, என்னைப் பிரிந்து போதற்கு, அரிய கொடிய பாலை வழியிற் செல்லத் துணிந்து விட்டனை, ஊரார் அலர் கூறிப் பழிப்பதையும் பொருட்படுத்தாது போகும் நின்பால், மக்கட்டன்மை அறவே இல்லை கொல்? வானம் வழங்கித் துணை புரிதலை விடுத்து, வெங்கதிர் வீசி வாட்டுவதால், நீ செல்லும் பாலை நிலம், தன் வளம் இழந்து வழங்கற்கு ஆகா வன்னிலமாய் மாறுதல் போல், உன் அன்பு உண்மையால் உயிர் வாழும் யான், அவ் அன்பைப் பெறேனாயின், உயிர் இழப்பேன் என்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/149&oldid=822153" இலிருந்து மீள்விக்கப்பட்டது