பக்கம்:பாலைச்செல்வி.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 இ. புலவர் கா. கோவிந்தன் குன்றி மடியுமாறு கொடுமை செய்யும் காலம் அக் காலம். செல்லும் வழியில் நிலங்கள் வெப்ப மிகுதியால் வெடித்துக் கிடக்கும். நீர்நிலைகள், சேறும் உலர்ந்து, செந்துள் பறக்கும். அத்தகைய கொடுமை மிக்க வழியில் அடிவைத்த அப்போதே, அவள் அதன் வெம்மை தாளாது இறப்பள். அந்நிலை உண்டாயின், அவனுக்கு இன்பம் ஊட்டும் அவள் கிளிமொழி, அமிழ்தம் ஊறும் அவள் எயிறு, மலைவளர் மூங்கிலின் எழில்மிக்க அவள் தோள் - இவ்வாறலாம் பயனைப் பெற இயலாது போகுமே என வருந்தினான். அதனால் அவளை உடனழைத்துச் செல்ல அஞ்சினான். அஞ்சியவன் அவளை நோக்கி, "அன்பே கடந்து செல்ல வேண்டிய காட்டு வழி, மழைத் துளிகளையே பார்த்தறியாதது. ஆங்கு வரும் நின் அடிகள், அந்நிலத்தின் கொடுமை பொறாது தளரும். நின் துயர் நிலையினை யான் எவ்வாறு தாங்கிக் கொள்வேன்? ஆங்கு வரும் நீ, நீர் வேட்கையுறின், ஆங்குள்ள ஆறு குளங்களெல்லாம் சேறுபட்டுக் கிடக்குமாதலின், நீ உண்டற்குச் சிறிது நீரும். ஆங்குக் கிடைக்காது. தண்ணிர் வேட்கை தணியப்பெறாது தளரும் நின் துயர்க் காட்சியை என் கண்கள் எவ்வாறு காண வல்லவோ? ஆங்கு வரும் நீ வெய்யிலின் வெம்மை தாளாது தளரின், நின்று அத்தளர்ச்சி போக்கும் நிழல்தரும் மரம் ஒன்றுகூட ஆங்கில்லை. அம் மரங்களெல்லாம், கோடையின் வெம்மையால், வறண்டு உலர்ந்து போய் விட்டனவே! நிற்க நிழலும் பெறாது தளரும் நின் நிலை கண்டு வருந்துவதல்லது, வந்த வினை முடித்து விரைந்து மீள்வது எவ்வாறு? ஆகவே, என் ஆருயிரே! உன்னையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/154&oldid=822159" இலிருந்து மீள்விக்கப்பட்டது