பக்கம்:பாலைச்செல்வி.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 புதுவது அன்றே! அழகெல்லாம் திரண்டு ஒர் உருவு கொண்டு வந்தா லன்ன ஒரு பெண்ணைக் கண்டு, அவள் பேரழகிற்கு அடிமையாகித், தன் அறிவிழந்து மயங்கினான் ஓர் இளைஞன். அவ்விளைஞன் தன்பால் காட்டிய ஆர்வம் கண்டு, அவனைக் காதலித்தாள் அப் பெண்ணும். அவ் விருவர் உள்ளமும் காதலால் கட்டுண்டமை கண்ட அவர் பெற்றோர். அவர்க்கு முறைப்படி மணமும் செய்து முடித்தனர். இருவரும் மனையற வாழ்க்கையை மகிழ்ந்து மேற்கொண்டனர். அவன், அவளை இமைப் பொழுதும் பிரியாது, இணைந்து வாழ்ந்தான். அவள் அழகை அள்ளிப் பருகி விடுவான் போலும் ஆர்வம் மிக்குடையனாம். அதைப் பலப்பல வகையால் பாராட்டிப் பேரின்பம் கொள்வன். "நறுமணம் நாறும் முல்லை அரும்புகளை நிரல் பட வைத்தாற் போல், நின் வெண்ணிறப் பற்கள் வரிசையாக அமைந்த வனப்பே வனப்பு! மணப்பொருள் கலந்த எண்ணெய் இட்டு நீவி, நீலமணி ஒளி விட்டாற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/164&oldid=822170" இலிருந்து மீள்விக்கப்பட்டது