பக்கம்:பாலைச்செல்வி.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 曦 புலவர் கா. கோவிந்தன் ني لا கருநீல மலரை யொத்த கண்கள் வளை விளங்கும் முன் கை; ஒளி வீசும் நெற்றி முதலியவற்றால் பேரழ குடையளாய பெண்ணொருத்தியை மனைவியாகப் பெற்று மகிழ்ந்து வாழ்ந்திருந்தான் ஓர் இளைஞன். அவள் அழகைக் கண்டு அக மகிழ்ந்து, அவள்பால் பேரன்பு கொண்டு, அவளைப் பிரியாது வாழ்ந்திருந்த அவன் ஒரு நாள், ஒரு வினையை முன்னிட்டு வெளியூர் செல்ல விரும்பினான். விரும்பியவன், தன் விருப்பத்தைத் தன் காதலிக்கு உணர்த்தினான். அவன் பிரிவன் என்பதை அறிந்த வுடனே, உடலும் உள்ளமும் தளரப் பெருந்துயருற்றாள் அப்பெண். கருநீல மலரை யொத்த அவள் கண்கள், கலங்கிக் கண்ணிர் சொரியத் தொடங்கின. அவள் முன்கையிற் கிடந்து, தானும் அழகுற்று, அவளுக்கும் அழகு தந்த அவள் கைவளை, கவலையால் தோள் தளரவே, அவள் கையை விட்டுக் கழன்று ஓடின. பேரொளி வீசிய நெற்றி, பசலை படர்ந்து, அவள் உள்ளத்துயரை ஊரார்க்கு உரைக்கத் தொடங்கி விட்டது. அந்நிலையில் அவளைக் கண்டாள் தோழி. அந்நிலைக்குக் காரணம் யாது என்பதை அறிந்தாள். அதனால், அவள் கணவனைக் கண்டு, அவன் போக்கினைத் தடுக்க விரும்பினாள். - உடனே அவன் பால் சென்று, 'ஐய! உலக அறிஞர்கள், ஒருவர் தம் அண்மையில் இருக்கும்வரை, அவர்க்குச் சிறப்புப் பல செய்து, அவரைப் பல்லாற்றானும் புகழ்ந்து வாழ்த்திவிட்டு, அவர் அவ்விடம் விட்டுச் சென்றவுடனே, அவரைப் பலரறியப் பழித்துரைக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/183&oldid=822191" இலிருந்து மீள்விக்கப்பட்டது