பக்கம்:பாலைச்செல்வி.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி ↔ 181 பண்பிலார் தொடர்பும், ஒருவர் செல்வம் உடையராய்ச் சிறக்க வாழும் காலத்தில், அவரை இமைப் பொழுதும் பிரியாதிருந்து, அவர் செல்வத்தையும் நுகர்ந்துவிட்டு, அவர் அச் செல்வத்தை இழந்து, வறியராயினர் என்பதை அறிந்த அக்கணமே, அவர்க்கு உதவ வேண்டும் எனும் உணர்வற்று, அவரை விட்டுப் பிரிந்து போய்விடும் பழியுடையார் தொடர்பும், ஒருவர், எவர்க்கும் உரைக்க லாகா ஒர் அரிய மறைப் பொருளை, ஒன்றிய உள்ளம் உடைமையால், தன்பால் கூறின், அவர் அப்பாற் சென்றவுடனே, அம்மறைப் பொருளை, ஆங்கு வருவார் பலர்க்கும் உரைக்கும் உணர்விலார் தொடர்பும் கூடாது, அவரால் நமக்குக் கேடே உண்டாம்! என்று கூறுவர். இந்த உண்மையை நீ உணராதது ஏனோ ? அத்தகைய இழிந்தாரொருவரோடு தொடர்பு கொளினும், அவரால் உண்டாம் கேடு அளவிறந்து பெருகும் என்றால், நீ அத்தகைய இழிந்தார் பலரோடு தொடர்பு கொண் டுள்ளனையே! என்னே நின் பேதைமை! அவரால் உனக்கு எத்துணைப் பெரிய கேடு வந்துறுமோ? "அன்ப! நீ பிரியாது கூடியிருக்கும் காலத்தில், கருநீல மலரை யொத்துக் கவின் மிகுந்து காட்சியளித்த நின் காதலியின் கண்கள், நீ பிரிவை என்பதை அறிந்தவுடனே, கண்ணிர் கசிந்து, உன் பழியைப் பலர் அறியத் தூற்றத் தொடங்கி விட்டனவே! நீ பிரியாது கூடியிருக்கும் காலத்தில், அவள் கையிற் கிடந்து, அழகு பெற்ற அவள் கைவளைகள், நின் பிரிவால் அவள் தோள் தளர்ந்து விட்டதை அறிந்தவுடனே, அவள் கையினின்றும் கழன்று ஒடி நின் கொடுமையினைக் காட்டிக் கொடுக்கின்றனவே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/184&oldid=822192" இலிருந்து மீள்விக்கப்பட்டது