பக்கம்:பாலைச்செல்வி.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 இ. புலவர் கா. கோவிந்தன் களுக்கும் அந் நாட்டு மக்களுக்கும் விளைத்த கொடுமை களைந்து அமைதி காண ஆற்றிய அருந் தொண்டும், அவ்வப்போது ஆங்கிருந்து வருவார்வழிக் கேட்டுக் கேட்டுக் களிப்புற்றாள் அவன் மனைவி. அந்நிலையில் பின்பனிக் காலம் கழிய, இளவேனிற் காலம் தொடங்கும் அறிகுறிகள் தோன்றலாயின. அது சென்ற ஆண்டில், அவளும் அவனும் ஒன்று கூடிச் சென்று கண்டு மகிழ்ந்த வேனில் விழா நிகழ்ச்சிகளை நினைப் பூட்டிற்று. நகரில் ஆனேற்றைக் கொடியாகக் கொண்ட சிவன் முதலா மீனைக் கொடியெனக் கொண்ட காமன் ஈறாகவுள்ள கடவுளர்க்கு, வேனில் விழாக் குறித்துச் செய்யும் சிறப்புக்களை நினைந்து சிந்தை நொந்தாள். அந் நினைவோடே, வையையாற்றில், வேனில் விழா நிகழும் திருமருதத் துறையினைக் கண்டாள். ஆங்கு, வெண்கடம்பு, செருத்தி, காஞ்சி, ஞாழம், இலவம் முதலாம் மரங்களும், வேனிற்காலத்தே மலரும் இயல்பினவாய பிற மரங்களும் மலர்ந்து நிற்கும் மாண்பு மிக்க மரக் காட்சியையும், வெண்கடப்ப மலரின் வெண்ணிறம் பலதேவனையும், செருத்தி மலரின் செந்நிறம் ஞாயிற்றையும், காஞ்சி மலரின் கருஞ் செந்நிறம் காமனையும், ஞாழல் மலரின் பகஞ் செந்நிறம் காமன் தம்பி சாமனையும், இலவ மலரின் பொன்னிறம் கலந்த செந்நிறம் சிவனையும் நினைப்பூட்ட மலர்ந்து மணக்கும் மலர்க் காட்சியையும், புதியவாக மலர்ந்த அம் மலர்களில் நிறைந்து வழியும் தேனைக் குடிக்கும் வண்டுகளும், தேனிக்களும் செய்யும் ரீங்கார ஒலியையும், புதுப்புனல் அற்றுப்போகத் தெளிந்து, சிறிது சிறிதாக, ஆங்காங்கே ஒழுகும் ஆற்றின் அறல் நீர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/191&oldid=822200" இலிருந்து மீள்விக்கப்பட்டது