பக்கம்:பாலைச்செல்வி.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி ஒ 197 சாயல் அழிய, அவ்வழிவு கண்டு அகம் மகிழும் மயில்கள், அம்மகிழ்ச்சியால் நின்று ஆரவாரிக்கவும், ஊர்ப் பெண்க ளெல்லாம் ஒன்றுகூடி நின்று பழி துாற்றிப் பரிகசிக்கவும், நம் பண்டைப் பேரழகு அறவே அழிந்துபோமாறு நம்மை மறக்கினும் மறக்குக! நம் பொருட்டு வாராதொழியினும் ஒழிக! பகைவரை வென்று, அப்பகைவர் உயிர் தாங்கி நின்ற மாமரத்தை வெட்டி வீழ்த்தி வென்றி தந்த வேலேந்திய செவ்வேள் வீற்றிருக்கும் பரங்குன்றிற்கு, மகளிரோடும் சென்று, மகிழ்ந்து விளையாடும் வேனில் விழா விளையாடல் குறித்தாவது வாராரோ? தோழி ! 6נגLפ தீட்டப் பெற்றுக் கருநீல மலர் நிகர்க்கும் கவினுடைய வேனும், பண்டு அவர் காட்டிய பொய்யன்பால் மயங்கி மதியிழந்து போன கண்களை யுடையேமாகிய நம்மை மறக்கினும் மறக்குக! நம்பொருட்டு வாராதொழியினும் ஒழிக! வையை ஆற்றில் மணல் பரந்த கரைக்கண், ஆடை அணிகளால் தம்மை ஒப்பனை செய்து கொள்ளும் பரத்தை மகளிரோடு சென்று, அவரோடு ஆடிப்பாடி அகமகிழும் வேனில் விழாவில், தாம் நுகரும் அப் பேரின்பம் கருதியாவது வாராரோ?” என்றெல்லாம் கூறி, "இளவேனிற் பருவம் வந்து வருத்துகிறது. அவ்வருத்தத் தைப் போக்க அவர் வந்திலர்; அவர் வரினும், தாம் விரும்பும் பரத்தை மகளிரோடு சென்று விழாக் கண்டு மகிழ்வரே அல்லால், அவர் வரவால் எனக்கு இன்பம் இல்லை. எனக்குப் பயனில்லை யாயினும், அவருக்குப் பயன்படல் கருதியாவது அவர் வாராரோ?" என ஏங்கி நின்றாள் அப்பெண். அப் பெண்ணின் துயர் அறிந்தும், அத் துயரைப் போக்கும் வகை அறியாது, வாய் திறவாதே வருந்தி நின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/200&oldid=822210" இலிருந்து மீள்விக்கப்பட்டது