பக்கம்:பாலைச்செல்வி.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ 207 ஒடும் அருவி, அவ்வாற்றின் கொய்மணலை ஊடறுத்து ஒதுக்கி ஒதுக்கிச் செல்லத் தொடங்கிற்று. சிறிதே முற்றிய மாவின் தளிர்மீது, அம் மாவின் மகரந்தம் படிந்து, 'ம்ாய்ோள் மேனியிற் படர்ந்திருக்கும் தேமல் போலும் தோற்றம் தரலாயிற்று. இவ்வெழில் மிக்க இளவேனிற் பருவத்தின் வருகையினைக் கண்டாள் ஒரு பெண். கணவன் பொருள் தேடிப் போயிருக்கவே, எம் குடி விளக்கும் மகவின்று, யான் மாண்புறுதற்கும், மகவை அணைத்துக் கிடக்கும் மாண்புமிக்க அக்காட்சியைக் கண்டு, அவன் இன்புறுதற்கும் வாய்ப்பளித்து, உடனிருந்து வாழ எண்ணாது, பொருள் கருதிப் பிரிந்து போயினனே! என்ற எண்ணமுடையளாய் ஏங்கியிருந்தாள் அப்பெண். அதனால், அவள் கண்ட அவ்வியற்கைக் காட்சியிடத்து, கருவுற்ற காலத்தில் உண்டாகும் வயா எனும் வேட்கை நோயால், தாயும், தந்தையும், தமரும் போற்றிய தன் இளமைக் கால்த்து எழிலை அவர் கண்டு வருந்துமாறு அறவே இழந்து, இழக்கலாம் அளவிற்கு மேலும் இழந்து, தன் குடி விளக்கும் வீறுசால் புதல்வனைப் பெற்று, அப்புதல்வனோடு கிடந்த ஒரு பெண், பின்னர், அப் புனிறு போகப் பசப்பு நீங்கிப் புது நலம் பெற்றுப் பெர்லிவுற்றுத் தோன்றும் காட்சியைக் கண்டு, அந்நல்வாய்ப்புத் தனக்கு வாய்த்திலதே என வருந்தினாள்: அவள் நெஞ்சு அவளை விட்டு அவன் பின் சென்று அலைந்தது. அந்நினைவு மிகுதியால், அவள் மேனி தளர்ந்தது; தோள் மெலிந்தது; தொடி கழன்றது. இவ்வாறு வருந்துவாளைக் கண்டாள், அவள் தோழி. பொறையும் நிறையும் பெண்களின் பேரணிகலன்களாம். துயர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/210&oldid=822221" இலிருந்து மீள்விக்கப்பட்டது